அருமையான அகத்தி கீரை பொரியல் செய்வது எப்படி?





அருமையான அகத்தி கீரை பொரியல் செய்வது எப்படி?

0

அகத்தி கீரையில் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. அகத்திக்கீரை அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்துகிறது. 

அருமையான அகத்தி கீரை பொரியல் செய்வது எப்படி?
அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறி விடும். அகத்தி பொலிவற்ற தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. 

அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும். 

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது. சரி இனி அகத்திக்கீரை பயன்படுத்தி அருமையான அகத்திக்கீரை பொரியல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

உங்கள் பற்றி அறிந்திராத சுவாரசிய தகவல் தெரிந்து கொள்ள?

தேவையான பொருட்கள் . :

அகத்தி கீரை- 1 கட்டு

சிவப்பு மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 12

தேங்காய்த் துருவல் - அரை கப்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க . :

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை . :

அருமையான அகத்தி கீரை பொரியல் செய்வது எப்படி?

சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும். பின் பொடியாக அரியவும். 

அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வெந்த கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து கிளறவும். பின்பு தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைய காரணம் !

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் . : 

ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பொரியல் நன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)