மூங்கில் குருத்தில் உள்ள மருத்துவ குணம் தெரிந்து கொள்ளுங்கள் !

மூங்கில் குருத்தில் உள்ள மருத்துவ குணம் தெரிந்து கொள்ளுங்கள் !

0

மூங்கில் குருத்துவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்து. 

மூங்கில் குருத்தில் உள்ள மருத்துவ குணம் தெரிந்து கொள்ளுங்கள் !
சித்தர்களும் நம் முன்னோர்களும் உணவு மூலம் எப்படி யெல்லாம் நோய்களை குணப்படுத்துவது என்கிற சூட்சமத்தை விட்டுச் சென்றுள்ளனர். 

ஆனால் நாம் தான் அதை எல்லாம் மதிக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்னாடியா இல்லை பின்னாடியா என கேட்டால் சாப்பாடே அது தான் என்ற ஒரு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. 

அந்த அளவுக்கு கைநிறைய மருந்துகளை கலர்கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் மூதாதையர்கள் நமக்காக எத்தனை அற்புதமான மூலிகைகளையும் உணவு பொருட்களையும் தாவரங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். 

அதை யெல்லாம் சாப்பிட்டாலே வாழ்நாள் முழுவதும் நோய் இல்லாமல் இருக்கலாமே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என சும்மாவா சொல்லி யிருக்கிறார்கள்.

முடி வேகமா வளரணுமா? இந்த எண்ணெய தேய்ங்க போதும் !

அந்த வகையில் இன்று ஒரு அற்புதமான தாவரத்தைத் தான் பார்க்க போகிறோம். மூங்கில் தாவரத்தில இருக்கும் மூங்கில் குருத்துகள். இவற்றில் அதிக கொழுப்போ கலோரிகளோ கிடையாது. 

மிகவும் ருசியாக இருக்கும். இந்த மூங்கில் தண்டுகளுக்கு மூங்கில் குருத்து என்றும் மூங்குறுத்து என்றும் பெயர்கள் உண்டு. இவை ஆரோக்கியமானவை.

இந்த மூங்கில் குருத்துகள் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து மிகுந்தது. இதில் நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளன. 

இந்த மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் பருமனுக்கு எதிராக உள்ளது. இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது. 

உடல் முழுவதும் ரத்தத்தின் இயக்கம் எளிதாக்க உதவுகிறது. இதில் நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மூங்கில் குருத்து வயிற்றுப் போக்குக்கு நல்லது. 

மூங்கில் குருத்தில் உள்ள மருத்துவ குணம் தெரிந்து கொள்ளுங்கள் !

குடல் இயக்கங்களையும் பாதுகாக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. இது சிறந்த ஆன்டி பயாடிக். நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கிறது. ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சினைகளை தீர்க்கிறது. 

சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது. மாதவிடாயால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு மற்றும் ரத்தபோக்கு போன்ற வற்றிற்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடக் கூடாது. 
மாதவிலக்கை தள்ளிப் போட்டால் உடல்நலம் பாதிக்கும் !

இது கருப்பையை சுருக்கும். ரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்தை உணவில் சேர்த்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதை சாப்பிடக் கூடாது. 

தைராய்டு உள்ளர்களும் தாய்ப்பால் தரும் பெண்களும் இந்த மூங்கில் குருத்தை தவிர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)