தீபாவளி கறிக்குழம்பில் என்ன சிறப்பு? கலைஞர் தாமு !

தீபாவளி கறிக்குழம்பில் என்ன சிறப்பு? கலைஞர் தாமு !

0

கறிச்சோறு என்பது தொடக்கத்தில், ஆட்டுக்கால் பாயா செய்யும் நடைமுறை யாகத்தான் இருந்தது, பின்னர் கறிக்குழம்பு என்ற நடைமுறை வந்தது என்பது பிரபல சமையல் கலைஞர் தாமுவின் கருத்து.

தீபாவளி கறிக்குழம்பில் என்ன சிறப்பு? கலைஞர் தாமு !
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே சமையல் தொடங்கி விடும். ஆட்டுக்கால் பாயா செய்வதற்காக, விறகு அடுப்பில் நெருப்பு மூட்டி, சட்டியில் ஆட்டுக்கால் துண்டுகளை வேக வைத்து விடுவார்கள். 

அடுத்த நாள் அதிகாலையில் சமையல் செய்து முடிப்பதற்கு ஏதுவாக துண்டுகள் வெந்திருக்கும். தேங்காய்ப்பால் மற்றும் மிளகு சேர்த்து பாயா செய்து விடுவார்கள். 

இதற்கு இட்லி, இடியாப்பம் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். காலை வேலை மட்டும் சமைத்தால் போதும், அந்த குழம்பில் தான் மதிய உணவையும் எடுத்துக் கொள்வார்கள். 

சமீப ஆண்டுகளில், பாயாவுக்கு பதிலாக, கறிக்குழம்பு செய்கிறார்கள், என குழம்பு வைக்கும் முறை பற்றிய தனது புரிதலை சொல்கிறார் தாமு.

நம் வாழ்க்கையில் நாம் செய்யும்  பெரிய தவறுகள்?

ஒரு சில வீடுகளில் கோழிக்கறி சமைக்கப் பட்டாலும், ஆட்டு இறைச்சி தான் பிரதானமாக சமைக்கப் படுகிறது என்றும் சொல்கிறார் அவர். 

சைவம் சமைக்கப்படும் வீடுகளில் கூட, காலை நேரத்தில், வடகறி, காய்கறி குருமா, மதியம் பக்கோடா குழம்பு போன்ற குழம்பு வகைகளை சமைக்கும் வழக்கம் இருக்கிறது என்கிறார்.

தீபாவளி கறிக்குழம்பில் என்ன சிறப்பு? கலைஞர் தாமு !

தீபாவளி அன்று வைக்கப்படும் குழம்பில், எப்போதும் வைக்கப்படும் குழம்பை போல அல்லாமல், சில பொருட்களை சேர்ப்பதால் சுவை மிகவும் அதிகமாக இருக்கும் என்ற தகவலை சொல்கிறார் தாமு.

ஒரு சில வீடுகளில் கடல்பாசி சேர்ப்பது, கிராம்பு சேர்ப்பது போன்றவை பின்பற்றப்படும். ஒரு சில வீடுகளில் தீபாவளி நாளில் அதிக பலகாரங்கள் எடுத்துக் கொள்வதால், காரத்திற்கு மிளாகாய் தூள் குறைவாக சேர்த்துக் கொண்டு, மிளகுத்தூளை பயன்படுத்துவார்கள்.

ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் !

ஒரு சிலர் தீபாவளி அன்று மட்டும், குழம்பில் சேர்ப்பதற்கான தேங்காயோடு , முந்திரி பருப்பும் சேர்த்து அரைப்பார்கள், என விளக்குகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)