ருசியான அரைத்த பூண்டு குழம்பு செய்வது எப்படி?





ருசியான அரைத்த பூண்டு குழம்பு செய்வது எப்படி?

0

பூண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. 

அரைத்த பூண்டு குழம்பு செய்வது எப்படி?
இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டின் சில ஆச்சரியமான நன்மைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 

பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். 

ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அரைத்து விட்ட பூண்டு குழம்பு இப்படி செய்யுங்க. செம்ம ருசியாக இருக்கும். இதை 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் . :

எண்ணெய் - 5 ஸ்பூன் 

கடுகு

வெந்தயம்

கருவேப்பிலை

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - ஒரு கைபிடி

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

புளி கரைசல் - 50 Ml

தண்ணீர் - 1 டம்ளர் 

உப்பு - தேவையான அளவு

அரைக்க . :

எண்ணெய் - 1 ஸ்பூன் 

பூண்டு - 15 

சீரகம் - 1 டீஸ்பூன் 

மிளகு - 1 டீஸ்பூன் 

சின்ன வெங்காயம் - 5 

வெந்தயம் - அரை ஸ்பூன் 

கருவேப்பிலை - ஒரு கொத்து 

தக்காளி - 3 

செய்முறை . : 

அரைத்த பூண்டு குழம்பு செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் சீரகம், வெந்தயம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியதுடன், தக்காளியை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும். லேசாக வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இதை நன்றாக வதக்க வேண்டும். நிறம் மாறியதும் அரைத்த விழுந்தை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து அதில் புளி கரைத்ததை ஊற்றவும். 

தொடர்ந்து தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதித்ததும் இறக்கவும். அரைத்த பூண்டு குழம்பு தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)