சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை வித்தியாசம் என்ன?

சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை வித்தியாசம் என்ன?

0

இலவங்கப் பட்டையில் இரு வகைகள் உள்ளன. ஒரே தாவரக்குடும்பத்தை சேர்ந்தாலும் இரண்டிற்கும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை வித்தியாசம் என்ன?
கேரளாவில் விளைகின்ற பட்டையும், இலங்கையில் விளையும் சுருள் பட்டையும் உடல் நலத்தை பேண உதவும் மருத்துவ குணம் கொண்டவை. அத்துடன் விலையும் அதிகம். 

மாறாக சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பட்டை வகை விலை குறைவு என்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு பரவலாக பயன்படுத்தப் படுகிறது. 

முக்கியமாக உணவு விடுதிகளில். இந்த பட்டையில் COUMARIN என்ற கெமிக்கல் உள்ளது. இந்த COUMARIN கெமிக்கலானது RODENT என்று சொல்லப்படும் எலி மற்றும் கரப்பான் பூச்சி விஷம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் விஷத்தன்மையை அறிந்து இதன் உபயோகத்தை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்து விட்டார்கள். 

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் எலி விஷம் தயாரிப்பதற்க்காக மற்றும் சிறப்பு அனுமதியின் பேரில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படுகிறது.

நம் நாட்டில் இந்த போலி பட்டையின் இறக்குமதியை தடை செய்யக் கோரி (லவங்க)பட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்பைஸ்ஸ் போர்ட் (SPICES BOARD) மத்திய அரசிடம் 2007ம் ஆண்டிலிருந்து போராடி வந்தது. 

நீண்ட போராட்டத்திற்கு பின்பு தற்போது போலி பட்டையை (CASSIA CINNAMON) RESTICTED ITEM என்று இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனாலும் இந்த போலி பட்டை அமோகமாக விற்பனை ஆகிறது.

இலாபம் நோக்கம் தான் காரணம். நம் நாட்டில் வருடம் ஒன்றிற்கு போலி பட்டையானது பல ஆயிரம் டன் இறக்குமதி செய்யப் படுகிறது. 

இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான். இந்த போலி பட்டையானது கிலோ ஒன்று ரூ.150/- முதல் ரூ.600/- வரை விற்பனை செய்யப்படுகிறது. 

ரூ.150/-க்கு விற்பனை செய்தாலே சுமார் 300% லாபம் கிடைக்கிறது. தம்மால் விற்பனை செய்யப்படுவது போலி பட்டை தான் என்பது பெரும்பாலான விற்பனை யாளர்களுக்கு கூட தெரிவதில்லை. 

அசலும் போலியும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரியும், மேலும் இதன் வாசனையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டை தான் உண்மையான மருத்துவ குணமுள்ள ஒரிஜினல். போலி (லவங்க) பட்டை என்பதை ஆங்கிலத்தில் CASSIA CINNAMON என்று கூறப்படுகிறது. 

இது பார்ப்பதற்கு இலங்கையின் பட்டையை போல் இருக்கும். இந்த போலி பட்டை என்பது சீனா, இந்தோனேஷியா, வியட்னாம், போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. 

இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான். கேசியா லவங்கப் பட்டை என்றழைக்கப்படும் லவங்க மரத்தின் தட்டையான பட்டையில் தயாரித்த பிரியாணி போன்ற 

சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை வித்தியாசம் என்ன?

உணவு வகைகளை தொடர்ச்சியாக உண்ணும் போது பட்டையில் உள்ள கவ்மரின் (coumarin) என்ற வேதிப் பொருள் வாய்ப்புண், சுவாசக் கோளாறு என தொடங்கி, 

கிட்னி செயல் இழப்பு, கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் என 6 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் சுருள் வடிவ லவங்கப் பட்டையில் இயற்கையிலேயே உடலுக்கு நன்மை பயக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதால், 

இந்த வகை லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்ட பிரியாணியை உண்பதால் எந்த பாதிப்பு ஏற்படுவது இல்லை என்றும் தீர்வு சொல்கின்றனர் மருத்துவர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)