மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி?





மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி?

0

சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா மற்றும்  ஃபிஷ் சமோசா குறிப்பிடத்தக்கவை. 

மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி?
அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு சமோசா. இது பஞ்சாபி சமோசா என்றும் அழைக்கப் படுகிறது. இது வெங்காய சமோசா போல் அல்லாமல் மிருதுவாக இருக்கும்.

சமோசாவில் நமக்கு பிடித்தவற்றை உள்ளே வைத்து சுவையான விதவிதமான சமோசா செய்யலாம், காய்கறிகளை வைத்து செய்தால் காய்கறி சமோசா. வெங்காயம் வைத்து செய்தால் வெங்காய சமோசா. 

பன்னீர் மசாலா தூவி வேக வைத்து பனீர் சமோசா செய்யலாம். மாலை நேரங்களில் சுட சுட சமோசாவை புதினா சட்னியில் தொட்டு உண்ணும் சுவையே தனி தான். 

பொதுவாகவே சமோசா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி. மாலை நேரங்களில் சுட சுட சமோசா செய்து விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி. 

அனைவருக்கும் பிடித்தமான இந்த சமோசாவை நம் வீட்டிலேயும் செய்து சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள் . :

மைதா மாவு - 2 கப்  ஓமம் - 1/2 டீஸ்பூன்  

சூடான தண்ணீர் - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 

மசாலா செய்ய . :

உருளைக்கிழங்கு - 3   

பச்சைப் பட்டாணி -   1/2 கப் 

பச்சை மிளகாய்  - 3

துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்

சீரகம் -  1/2 டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் -  1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் -  1/2 டீஸ்பூன்

மாங்காய் பொடி -    1 டீஸ்பூன் 

சாட் மசாலா -  1/2 டீஸ்பூன்  

நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்  எ

ண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை . :  

மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி?

முதலில் மைதா மாவை ஒரு‌ பாத்திரத்தில் சலித்து அதனுடன் உப்பு, ஓமம் மற்றும் சூடான நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு இதனை ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் வைக்கவும்.  

பின்னர் ‌ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து ‌வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.  

இதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி வேக வைத்த பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின்னர் அடுப்பை அனைத்து விட்டு 10 நிமிடம் கழித்து மாங்காய் பொடி மற்றும் சாட் மசாலா நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மசாலாவை கலந்து நன்கு ஆறவிடவும்.

ஆடை அணியாத மக்கள்.. முழு நிர்வாணம்.. விசித்திர கிராமம் !

பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சமோசா போல் சுருட்டி கொள்ளவும். பின் அதில் செய்து வைத்த மசாலாவை வைக்கவும்.

இது அனைத்தையும் தயார் செய்த பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சமோசாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 

அவ்வளவு தான் சுவையான பஞ்சாபி ஸ்டைல் சமோசா தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)