அருமையான அவல் வடை செய்வது எப்படி?





அருமையான அவல் வடை செய்வது எப்படி?

0

இன்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக அவல் வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அவலை வைத்து இந்த வடை இருக்கிறோம். 

அருமையான அவல் வடை செய்வது எப்படி?
இந்த வடை மொறு மொறுப்பு தன்மை அதிகமாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியோர்களும் பிடித்த ஒரு வடையாக இருக்கும். இந்த அவல் வடையுடன் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும். 

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இந்த மொறு மொறுப்பான அவல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் . : 

மெல்லிய அவல் - 2 கப், 

அரிசி மாவு - 1/4 கப், 

ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன், 

பெரிய வெங்காயம் - 1. 

கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

கொர கொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன், 

கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிதளவு 

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கு, 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, 

செய்முறை . :

அருமையான அவல் வடை செய்வது எப்படி?

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும். 

வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், 

கொர கொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !

கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)