இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.
பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன?
இது மைசூரில் தான் முதன் முதலில் உதயம் ஆனது. அதனால் இந்த ருசியான இனிப்பு பண்டத்தை மைசூர் என்ற பெயரை சேர்த்தே அழைக்கிறோம்.
ருசியான மைசூர் பாகு சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் பாகு மூலம் தயாரிக்கப் பட்டதாலும் ஊர் பேரையும் இந்த பாகுவையும் சேர்த்து மைசூர் பாகு என்று பெயர் பெற்றது.
இந்த மைசூர் பாகு உச்சரிப்பில் சிறிது மாற்றம் பெற்று இன்று மைசூர் பாக்கு என்றே அழைக்கிறார்கள். மைசூர் பாகு செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல மற்ற இனிப்பு பண்டங்களை போல் நினைத்த உடன் செய்து விட முடியாது.
இதை முயற்சித்தவர் களுக்கு தான் தெரியும். என்னெனில் பாகு சரியான பதம் எடுத்தால் மட்டுமே அதன் ருசியை முழுவதுமாக பெற முடியும்.
5G பற்றி அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள !
கொஞ்சம் பாகு பதம் வருவதற்குள் எடுத்து விட்டால் மைசூர் பாகு அல்வா போல் இருக்கும். கொஞ்சம் பாகு பதம் கூடி எடுத்து விட்டால் கல் போல் மாறி விடும் உடைக்க கூட முடியாது.
இதனால் தான் பலரும் இதை முயற்சிக்க கூட பயப்படுகிறார்கள் என்றே நினைக்கின்றேன். பாதாம் வைத்து சூப்பரான மைசூர் பாக் ரெசிபி எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் . :
பாதாம் - ஒரு கப்
சூடான தண்ணீர் - 2 கப்
பால் - சிறிய அளவு
கடலை மாவு - அரை கப்
எண்ணெய் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - அரை கப்
செய்முறை . :
பாதாமை சுடு தண்ணீரில் கலந்து அதன் தோலை நீக்கவும். பாதாமுடன் சிறிய அளவு பாலை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எண்ணெய் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கிண்டவும். தொடர்ந்து ஒரு கம்பி பதம் வந்ததும். அதில் கடலை மாவு எண்ணெய் கலவையை சேர்த்து கிண்ட வேண்டும்.
நூற்றுக்கணக்கில் காகங்கள்? இயற்கையின் எச்சரிக்கை உண்மை என்ன?
அடுப்பின் தீயை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் பாதாம் அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து கிண்ட வேண்டும். இந்நிலையில் ஒரு கப் முழுவதும் நெய்யை உருக்கி எடுக்கவும்.
அதை இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தற்போது இதை தொடர்ந்து கிண்ட வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். மிதமான சூட்டுக்கு மாறியதும் அதை சிறிய கத்தியால் வெட்ட வேண்டும்.