டேஸ்டியான வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் செய்வது எப்படி?





டேஸ்டியான வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் செய்வது எப்படி?

1

சுண்டல் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இவற்றில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் எடையைக் குறைக்க உதவுகிறது. 

டேஸ்டியான வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் செய்வது எப்படி?

சுண்டலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலை உணவாக சாப்பிடலாம். இது குறைந்த கலோரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இதை சாப்பிட்ட பிறகு, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். 

குடலியக்கத்தால் புற்று நோய் வராமல் இருக்க சில வழி !

இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சுண்டலில் போதுமான அளவு மக்னீசியம் உள்ளது. 

இவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் கொலாஜன் உருவாவதற்கும் உதவுகிறது. இதன் மூலம், தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 

மேலும் சுண்டல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சுண்டலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

கீரைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப் படுகிறது.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

இனி சுண்டல் கீரை பயன்படுத்தி டேஸ்டியான வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

கோதுமை அடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் . :

வெள்ளை கொண்டைக் கடலை -200 கிராம்

கீரை – 1 கட்டு (ஏதேனும் வகை கீரை)

உருளைக் கிழங்கு– 150 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

சீரகம்- ½ ஸ்பூன்

எண்ணெய் – 200 கிராம்

பச்சை மிளகாய் – 6

உப்பு – தேவையான அளவு

செய்முறை . :

டேஸ்டியான வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் செய்வது எப்படி?

கொண்டைக் கடலையை வேக வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்து அத்துடன் வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு பிசையவும். 

காய்கறி கோதுமை போண்டா செய்வது எப்படி?

இப்போது சிறு சிறு வடிவங்களில் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளை கொண்டைக் கடலை கீரை கட்லெட் ரெடி.

Tags:

Post a Comment

1Comments

  1. இந்த டிஷ் வித்தியாசமா நல்லா இருந்துச்சு நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க...

    ReplyDelete
Post a Comment