கொத்தமல்லி டீயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?





கொத்தமல்லி டீயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

0

நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள், நமக்கு சுவை அளிப்பதோடு, அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. 

கொத்தமல்லி டீயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
கொத்தமல்லி அல்லது தனியா இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இந்த மசாலாப் பொருள் இல்லாமல் எந்த சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. 

இது ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு உணவையும் மகிழ்விக்கும். மேலும், இது சுவை அளிப்பதோடு, மருத்துவ குணங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அத்தகைய கொத்தமல்லியின் டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

எலும்புகளுக்கு நல்லது

எலும்புகள் வலுவாக இருந்தால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியை தடுக்கலாம். இந்நிலையில் உங்களுடைய எலும்புகளை வலுவாக வைத்திருக்க, கால்சியம் சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி டீயை எடுத்துக் கொள்ளலாம். 

இதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எலும்புகளை பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

கொத்தமல்லி டீயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கொத்த மல்லியில் உள்ள பண்புகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் இரத்த நாளங்களில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கின்றன. 

கொத்தமல்லி இலை டீ குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை குடித்து வர மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த பல நோய்களை தடுக்க முடியும்.

அழகான சருமத்தை பெறலாம்

கொத்தமல்லி இலை டீ, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் அதிக நன்மைகளை தரும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கவும், வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. 

இந்த டீயை குடித்து வர நீங்கள் உள்ளிருந்து அழகாகலாம். கொத்தமல்லி டீ குடிப்பது உங்களுடைய சருமத்தின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வயிற்றுக்கு உகந்தது

கொத்தமல்லி டீயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலையாலும், அதிகப் படியான ஜங்க் அல்லது பொரித்த உணவுகளை சாப்பிடுவதாலும் உடலில் கொழுப்பும் நச்சுக்களும் சேர தொடங்குகின்றன. 

இது போன்று சூழலில், கொத்தமல்லி இலை டீ போன்ற ஒரு ஆரோக்கியமான பானத்தை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சுலபமாக நீக்க முடியும். இந்த டீயை குடித்து வர செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கொத்தமல்லி நீர் செய்வது எப்படி?

கொத்தமல்லி நீரைத் தயாரிக்க, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் நீரில் இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், விதைகளை வடிகட்டி, வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)