வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா?





வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா?

0

வெண்டைக்காயை நாம் பொறியல் அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிடுவோம். ஆயிர்வேத முறைப்படி வெண்டைக்காயை நாம் தண்ணீரில் சேர்த்து குடித்தால், எடை இழப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாது.

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா?
வெண்டைக்காய் நீரை தினமும் குடித்தால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படாது. புரதம், நார்சத்து, கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம்,  பொட்டசியம், சோடியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன.

எப்படி செய்வது ?

ஒரு பாட்டிலில், 1.5 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் 4 முதல் 6 வெண்டைக்காய்களை வெட்டி சேர்க்கவும். 8 மணி நேரம் ஊற வேண்டும். இந்த பாட்டிலை நன்றாக இருக்கமாக மூடி வைக்கவும். அடுத்த வெண்டைக்காயை வடிகட்டி தண்ணீரை குடிக்கவும்.

சுகர் நோய்

வெண்டைக்காயில் இன்சிலின் உற்பத்திக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இன்சுலின் குறைபாட்டால் சுகர் நோய் ஏற்படுகிறது. இந்நிலையில்  வெண்டைக்காய் தண்ணீரை குடித்தால் சுகர் நோய்யை கட்டுபடுத்த முடியும்.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

சுறுசுறுப்பாக செயல்பட உதவும்

வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்து மிகவும் அதிகம். இது உங்களுக்கு நாள் முழுவதும் இயங்கும் சக்தி அல்லது ஆற்றலை தருகிறது.

இதில் இருக்கும் போலிக் ஆசிட் புற்று நோய்யை தடுக்கும் என்று கூறப்படுகிறது. வெண்டைக்காய் நீர் கல்லிரலில் உள்ள நஞ்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

இதில் உள்ள பொட்டாஷியம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக எலும்பை வலுப்படுத்தவும். உயர் ரத்த அழுத்தத்தை  கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இதில் உள்ள நார்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படாது. வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள  வைட்டமின் சி, கொலஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)