பூ போன்ற கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?

பூ போன்ற கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?

0

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. 

பூ போன்ற கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். 

ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை பெறுபவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். 

ஆம், இன்று கோதுமை ரவா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் நம் காய்கறிகளும் சேர்த்து இட்லி செய்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். 

மேலும் சுவையான கோதுமை ரவா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !

தேவையான பொருட்கள் : .

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்  

உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்   

கடலை பருப்பு -1 டேபிள் ஸ்பூன்   

முந்திரி பருப்பு - 8   

பெருங்காயத்தூள் - ¼ டேபிள் ஸ்பூன் 

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது  

மிளகாய் - 3 டேபிள் ஸ்பூன்  

கருவேப்பிலை - சிறிது 

மஞ்சள் தூள் - ¼ டேபிள் ஸ்பூன்   

கோதுமை ரவா - 1 கப் 

தயிர் - 1 கப் 

உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - ½ கப் 

நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !

செய்முறை : . 

பூ போன்ற கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?

முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.  

கடுகு நன்றாக பொரிந்ததும் பின் பருப்புகள் பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள். அதன்பின் இதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.  

பின் இதனுடன் சிறிது பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். 

அதன் பின் இதனுடன் சிறிது கருவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.  

அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் நாம் வைத்திருக்கும் கோதுமை ரவாவை கடாயில் சேர்த்து நன்றாக வறுக்கவும் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வருத்து கடாயை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.  

பின் கோதுமை ரவையை குளிர்ந்த உடன் தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு இதனுடன் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும். 

மாவு தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கட்டியாகவும் இல்லாமல் இருக்கும் மாறு தயார் செய்து கொள்ளவும்.  பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி அவ்வளவு தான் மாவு தயார். 

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

இதை இட்லி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி விட்டு அதன் கீழ் ஒரு முந்திரியை வைத்து அதன் மேல் மாவை ஊற்றி விடுங்கள் அவ்வளவு தான்.

இட்லி அவிந்தவுடன் எடுத்து விடுங்கள் ரூசியான கோதுமை ரவை இட்லி தயாராகி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)