இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?

0

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை பானங்களை பற்றி பேசுகையில், நம் நினைவுக்கு முதலில் வருவது இளநீர் தான். இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவ நிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். 

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதுடன், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. 

இளநீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடல் எடையை பராமரிக்கவும், செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன் உள்ளதாக இருக்கும்.

விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்ன தெரியுமா?

தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம். 

வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் தான் சரியான உதவுகிறது.

இளநீர் குடல் இயக்கத்தை எளிதாக்கி, ஆரோக்கியத்திற்கு பல அற்புத நன்மைகளை தருகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு இளநீர் ஆபத்தாக மாறலாம். 

இளநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, அதன் பக்க விளைவுகளை பற்றியும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணரான ஏக்தா அவர்களின் கருத்துப்படி, பெரும்பாலானவர்களுக்கு இளநீர் குடிப்பது எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. 

ஆனால் ஒரு சிலருக்கு இது லேசான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இந்நிலையில் இளநீரை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை கேட்டறிந்தபின் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது.

வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் : .

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?

இளநீரை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அலர்ஜி எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் : .

ஒரு சிலருக்கு இளநீருக்கு அலர்ஜி ஏற்படலாம். மேலும் இது ஒரு சிலருக்கு படை, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இளநீர் குடித்த பிறகு உங்களுக்கும் ஏதேனும் அலர்ஜி எதிர் விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

பாம்புகள் இல்லாத நாடு மற்றும் எந்த நாடு அதிக பாம்புகளைக் கொண்டுள்ளது?

இரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரிக்கும் : .

இளநீரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரிக்கலாம். 

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அல்லது ஏதேனும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்கள் இளநீரை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்து வதற்காக தினமும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரின் ஆலோசனை இன்றி இளநீரை குடிக்கக் கூடாது. 

ஏனெனில் இளநீர் இரத்த அழுத்தம் மருந்துகளுடன் குறுக்கிடலாம்.இப்போது பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக் செய்யப்பட்ட இளநீர் விற்பனை செய்யப் படுகிறது 

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?

இதில் செயற்கை சர்க்கரை சேர்க்கப் பட்டிருக்கலாம். சர்க்கரை சேர்க்கப்பட்ட இளநீரை குடிப்பது உடல் எடையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 

பேக் செய்யப்பட்ட இளநீரை தவிரத்திடுங்கள், இயற்கை தந்த பிரிசை அளவோடு எடுத்துக் கொண்டு பயன் பெறுவோம்.

தனி கரன்சி, தனி வங்கி.. நம்ம இந்தியாவில் இப்படி ஒருவரா?

இளநீரில் நன்மை தீமை இரண்டும் உண்டு. இளநீரால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. 

உடல் பருமன், அலர்ஜி மற்றும் ஏதேனும் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இளநீரை தங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)