கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !





கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

0

தினமும் காலையில் கொத்தமல்லி இலை தண்ணீர் குடித்து வந்தால் 10 விதமான நோய் தீரும் தினமும் காலையில் ஆரோக்கியமான முறையில் நாளை தொடங்க வேண்டும். 

கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
நீங்கள் எப்படி ஒரு நாளைத் தொடங்குகிறீர்கள் என்பது உங்கள் முழு நாள் மற்றும் ஆரோக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

தவறான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தவறுகளால் உடல்நலம் மோசமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். 

காலையில் கொத்தமல்லித் தண்ணிரை குடித்து விட்டு நாளைத் தொடங்கினால், பல நன்மைகளைப் பெறலாம். கொத்தமல்லி இலைகள் உணவின் சுவை மற்றும் நிறத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. 

அனஸ்திஸியா கொடுத்தும் வலியோடு செய்யப்பட்ட ஆபரேசன்... கொடூரம் !

கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் : .

சிறுநீரகம் நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு. இது பார்ப்பதற்கு அவரை பீன்ஸ் வடிவத்தில் இருக்கும். நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்றும் முக்கியமான வேலையை செய்கிறது. 

எனவே தான் இந்த உறுப்பு பழுதடைந்ததால் நாம் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே சிறுநீரகத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே சிகிச்சை பெறுவது அவசியம். 

சிறுநீரக செயல்பாட்டிற்கு பலன் அளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் பார்க்கும் போது கொத்தமல்லி இழைகள் நம் சிறுநீரகத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. 

கொத்தமல்லி சமையலில் மட்டும் பயன்படுவதோடு உணவு விஷத்தை தடுக்கவும் உதவுகிறது. 

இதில் ஆண்டி மைக்ரோபையல், கால்-கை வலிப்பு, ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்ட ஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. 

கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

எனவே இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனையும் களைகிறது. 

கொத்த மல்லியில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

தினமும் காலையில் கொத்தமல்லி இலை தண்ணீரை குடித்து வந்தால் அசிடிட்டி பிரச்சனை குணமாகும். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருந்தால் கொத்த மல்லி இலை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு நாளைக்கு 4 லட்சம்.. மனம் திறந்து பேசிய ஷகீலா ! 

சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு உள்ளவர்களும் கொத்தமல்லி தண்ணீரால் நிவாரணம் பெறலாம். தைராய்டு பிரச்சனைகளுக்கும் இந்த பானம் நன்மை பயக்கும்.

உங்களுக்கு பிபி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கொத்தமல்லித் தண்ணீரில் அன்றைய நாளைத் தொடங்குங்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மக்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதை நிர்வகிப்பதும் நன்மை பயக்கும்.

தினமும் காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் வீக்கம் மற்றும் நீர்ப்பிடிப்பு பிரச்சனைகள் நீங்கும். அல்சர் அல்லது கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தாலும் கொத்தமல்லி தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். ஒற்றைத் தலைவலி, கோபம் அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த நீரைக் கொண்டு நாளைத் தொடங்குங்கள்.

கொத்தமல்லி நீர் கண் பார்வையையும் மேம்படுத்துகிறது. இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

இதனால் செரிமானமும் மேம்படும். உங்களுக்கு அடிக்கடி வயிறு உபாதை இருந்தால் இந்த பானத்துடன் அன்றைய நாளைத் தொடங்குங்கள். எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?

கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்கும் முறை : . 

ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொள்ளவும். அதை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

அதை வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)