அருமையான மீன் குருமா செய்வது எப்படி?





அருமையான மீன் குருமா செய்வது எப்படி?

0

மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. 

அருமையான மீன் குருமா செய்வது எப்படி?
மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 

மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். 

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை  அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் 

மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினை யாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக் கழலை நோய்  ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். 

ஆனால் அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் மீன் குருமா செய்வது எப்படி? என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் : . 

மீன் - 500 கிராம்  

தேங்காய் - 4 துண்டு 

பச்சை மிளகாய் - 5 

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி 

கசகசா - 4 தேக்கரண்டி   

உப்பு - 3 தேக்கரண்டி  

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  

உப்பு - 1 தேக்கரண்டி 

பூண்டு - 1/2 பல்

இஞ்சி - சிறு துண்டு 

வெங்காயம் - 60 கிராம் 

பட்டை - ஒரு துண்டு 

கிராம்பு - 3 

எண்ணெய் - 50 கிராம் 

சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

செய்முறை : . 

அருமையான மீன் குருமா செய்வது எப்படி?

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். தேங்காயையும், கசகசாவையும் நீர் விட்டு விழுதாக அரைக்கவும். பச்சை மிளகாயை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். 

இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சிறிது நீர் விட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். 

அரைத்த தேங்காய், கசகசா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு ஆழாக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததம், வெங்காயம், நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலா, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும். 

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி !

வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்றி மூடி விட வேண்டும். 

15 நிமிடங்கள் கொதித்த பிறகு மூடியை அகற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு, மீன் வெந்ததும் குருமாவை இறக்கி விட வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)