ருசியான அவல் இடியாப்பம் செய்வது எப்படி?





ருசியான அவல் இடியாப்பம் செய்வது எப்படி?

0

தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம் பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற இலங்கை, பிரபலமடைந்து இருக்கிறது. 

ருசியான அவல் இடியாப்பம் செய்வது எப்படி?

இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப் படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன.

ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். 

இந்த அவல் இடியாப்பத்தை காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ அல்லது டிஃபினாகவோ சாப்பிடலாம். 

இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள அவல் இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். 

கீலாய்டு [Keloid] தழும்பு இது வேற !

தேவையான பொருட்கள் : .

அவல் - 5 கப் 

எண்ணெய் - 1 ஸ்பூன்   

தேங்காய் - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 

சர்க்கரை - தேவையான அளவு 

செய்முறை : . 

ருசியான அவல் இடியாப்பம் செய்வது எப்படி?

முதலில் பெரிய துளை உள்ள சல்லடையில் அவல் சேர்த்து லேசாக சலித்து கொள்ளவும்.  பின் அவல் வாணலியில் அவல் சேர்த்து கைகளால் அழுத்திப் பார்த்தால் நொடியும் அளவிற்கு கலர் மாறாமல் வறுக்கவும். 

பின் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி மையாக அரைக்கவும்.  பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1 கப் தண்ணீர் வீதம் 4.5 கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.  

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.  

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

பின்னர் வேகவைத்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி குளிர் நீரில் கைகளை நனைத்து நன்றாக அழுத்தி உருண்டை பிடிக்கவும்.  

இனி ஒவ்வொரு உருண்டைகளாக இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.  

அவ்வளவு தான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. எப்பொழுதும் போல் தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)