ருசியான அவல் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?





ருசியான அவல் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?

0

ஊற வைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப் படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப் பட்டன. 

ருசியான அவல் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?
தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழு சத்தும் நமக்கு கிடைக்கிறது. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. 
சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். வெறும் அவலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். 

காலை சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது. சரி இனி அவல் கொண்டு ருசியான அவல் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : .

அவல் - 1 கப்

கோதுமை மாவு - 1/2

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2

இஞ்சி பூண்டு விழுது

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

சீரகப்பொடி - ½ டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

துருவிய கேரட் - ½ கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

லைப்ரரிக்கு பிரா போடாமல் முன்னழகை காட்டி வந்த நடிகை !

செய்முறை : .

ருசியான அவல் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, சீரகப்பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.

இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது பொடித்து வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும். இது கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். 

அவல் கலவையுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். 

பீச்சில் பிறந்தநாள் - ஹாட் போட்டோ வெளியிட்ட நாகினி
இதனை சப்பாத்திகளாக திரட்டி, தோசை கல்லில் நன்கு திருப்பிப் போட்டு இருபுறமும் வேக விட்டு பரிமாறலாம். இந்த இரண்டு அவல் ரெசிபிக்களையும் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து மகிழுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)