ஈசலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை / தீமை என்ன?





ஈசலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை / தீமை என்ன?

0
ஈசலைச் சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு, கிராணி எனப்படும் ஒரு வகை கழிச்சல் நோய், சில வகை உட்காய்ச்சல்கள் ஆகியவை குணமாகும் சாத்தியம் உள்ளதாக, பதார்த்த குண சிந்தாமணி செய்யுள் கூறுகிறது. 
ஈசலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை / தீமை என்ன?
போக ஆற்றல், விந்துச் சுரப்பையும் அதிகரிக்க வல்லது ஈசலாகும். நாம் உண்ணும் மாமிச உணவுகளிலேயே, மிகக் குறைந்த அளவு நீர்ச்சத்துள்ளதும், அதிக ஆற்றலைத் தரவல்லதும் ஈசலே. 
100 கிராம் ஈசலில், 2.1 கிராம் நீர்ச்சத்தே உள்ளது. இந்த 100 கிராம் ஈசல், நமதுடலுக்கு 598 கலோரி சக்தியை அளிக்க வல்லது. 100 கிராம் ஈசலில், 49.3 கிராம் புரதச்சத்து, 44.5 கிராம் கொழுப்புச் சத்து, 457 மி.லி கிராம் பாஸ்பரஸ்சத்து ஆகியன அடங்கியுள்ளன. 

ஈசலை, இறகு, தலை, கால், நீக்கி,அப்படியே உண்ணலாம். பாலாடை போன்ற சுவைதரும். அல்லது, அவல், அரிசி, ஈசல் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து, ஒன்றாக்கி, வெல்லத்தூளுடன் கலந்தும் உண்ணலாம். 
ஈசலை, நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க இயலாது. எனவே, ஈசல் இனிப்பு உருண்டை என்ற சிறப்பு இனிப்புருண்டை தயாரித்து, சில மாதங்கள் வரை, வைத்திருந்து உண்பது, தமிழகத்தின் சில பகுதிகளில் நடைமுறையிலும் உள்ளது. 

இதில், வெல்லம், வறுத்த அரிசி, பொட்டுக் கடலை, வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை, பொரி, தோல்நீக்கிய கம்பு ஆகியவை சேர்க்கப் படுகின்றன. 

ஈசலுக்கான பலன்களுடன், உடல் வலு கூடுதல், இரத்த விருத்தி, நரம்புத் தளர்ச்சி நீங்குதல், உள்ளிட்ட சில கூடுதல் பலன்களும் கிடைக்கும். 

50 கிராம் சீரகம், 200 கிராம் ஈசல் ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்து, இடித்து ஒன்றாக்கினால், ஈசல் சூரணம் தயார். 
இதை, உடல்வாகு மற்றும் நோயின் தன்மைக்கேற்ப, 3 முதல் 6 கிராம் வரை, தினமும் இரு வேளைகள், வெறும் வயிற்றில் மென்றுண்டு வர, வெகு மூத்திரம், கிராணி, பவுத்திரம் ஆகியன குணமாகும். 

குழந்தைகளை உண்ணும் துரித உணவிலிருந்து காப்பாற்றுங்கள் !

விந்துச் சுரப்பு அதிகரிக்கும். ஈசலை, வரைமுறையின்றி, அதிகளவில் உட்கொண்டால், உடல் வறட்சி, வயிற்றுவலி, போக இச்சை மிகுதி, சிறுநீர்க் கடுப்பு, பித்த மிகுதி சார்ந்த பாதிப்புகள், உள்ளிட்டவை ஏற்படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)