பன்னீர் சட்னி வாலி சாண்ட்விச் பக்கோடா செய்வது எப்படி?

பன்னீர் சட்னி வாலி சாண்ட்விச் பக்கோடா செய்வது எப்படி?

0

பொதுவாக பன்னீர் என்றாலே இதில் கால்சியமும், புரதச் சத்துக்களும் தான் உள்ளது என்று நினைக்கிறோம். உண்மையில் இதைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளன.  

பன்னீர் சட்னி வாலி சாண்ட்விச் பக்கோடா செய்வது எப்படி?
அதாவது, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஒவ்வொரு சத்துகளுமே, நமக்கு மிக அவசியமான சத்துக்களாகும். 

சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பனீர் உள்ளது, ஏனெனில் பனீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. 

மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது. 

இதில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் சத்தை உறிஞ்ச உதவும். சரி இனி பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் சட்னி வாலி சாண்ட்விச் பக்கோடா செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : .

பன்னீர் - 300 கிராம்

பகோடா மாவு தயாரிக்க  

கடலை மாவு - 200 கிராம்

சாட் மசாலா - 5 கிராம் 

உலர்ந்த சிவப்பு மிளகாய் தூள் - 5 கிராம்  

சன்ஃப்ளவர் ஆயில் - 250 மிலி (பொரிப்பதற்கு)   

உப்பு - தேவைக்கேற்ப

புதினா சட்னி செய்ய : .

புதினா - 1 கொத்து 

பச்சை மிளகாய்  - 2

உப்பு - தேவைக்கேற்ப

அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் !

செய்முறை : .

பன்னீர் சட்னி வாலி சாண்ட்விச் பக்கோடா செய்வது எப்படி?

கடலை மாவில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் போதுமான தண்ணீரைச் சேர்த்து, ஈரமாவாக மாற்றவும். பன்னீரின் துண்டுகளை வெட்டிக் கொள்ளவும். 3 செமீ சதுரங்களாக 1 செமீ தடிமனில் வெட்டிக் கொள்வது நல்லது.

பன்னீர் துண்டுகளின் நடுவே கீறி விட்டு, அதில் புதினா சட்னியை நிரப்பி சாண்ட்விச் போலாக்கவும். பன்னீர் சாண்ட்விச்சை கடலை மாவில் தோய்த்தெடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். 

இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?

பொன்னிறமாக மொறு மொறுப்பாக மாறியவுடன் வெளியே எடுத்து சூடாகப் பரிமாறவும். புதினா அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக சாப்பிடவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)