சுவையான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி?

0

மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், தட்டு வடையை செய்து கொடுங்கள். 

சுவையான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி?

இந்த தட்டு வடை ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.. இந்த தட்டு வடையை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையானவை : .

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

துருவிய கேரட், பீட்ரூட் - தலா ஒரு கப்

துருவிய மாங்காய் - அரை கப் (விரும்பினால்) பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - சிறிது

எலுமிச்சை - அரை மூடி

ரெட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு - சிறிது

சிறிய தட்டு வடை - தேவையான எண்ணிக்கை

ரெட் சட்னி செய்ய... 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 10 பல் உரித்த பூண்டு, 8 காய்ந்த மிளகாய், சிறிது கடலைப் பருப்பு, 2 கொட்டைப் பாக்கு அளவு புளி, நறுக்கிய தக்காளி 4, 

தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பேலியோ டயட் உணவு முறை பலன் தரக்கூடியது?

கிரீன் சட்னி செய்ய... 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 6 பல் உரித்த பூண்டு, 4 பச்சை மிளகாய், சிறிது கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி மல்லித்தழை, 

2 கைப்பிடி புதினா, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை : .

சுவையான சேலம் தட்டுவடை செட் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், பீட்ரூட், நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு, துருவிய மாங்காய் (விரும்பினால்), பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். 

பின்பு ஒரு தட்டு வடையில் கிரீன் சட்னியை தடவி ஒரு தட்டில் வைத்து, அதன்மீது காய்கறிக் கலவையை சிறிதளவு வைத்து, சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து, 

காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?

இன்னொரு தட்டு வடையை எடுத்து அதன்மீது ரெட் சட்னியை தடவி, காய்கறிக் கலவையின் மீது வைக்கவும். சேலம் தட்டு வடை செட் ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)