குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?





குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?

0
உலகம் முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது. பொதுவாக இனிப்புகள் அனைத்தையும் சாக்லேட் என்று சொல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு.
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
ஆனால் இனிப்பு மிட்டாய்களை கேண்டி (Candy) என்றும், கோகோவால் உருவாக்கப்படும் பல்வேறு வகை இனிப்புகளையும் சாக்லேட் என்று அழைக்கின்றனர்.
 
சாக்லேட் வகைகளில் முக்கியமானதாக டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இவற்றுடன் வேறு சில பொருட்களை சேர்த்து பல்வேறு வகை சாக்லேட்டுகள் உருவாக்கப் படுகின்றன.
1847ல் பிரிட்டிஷ் சாக்லேட்டியர்களான ஜே.எஸ்.ஃப்ரை மற்றும் அவரது மகன்கள் முதன் முதலாக சாக்லேட்டை சர்க்கரை சேர்த்து சின்ன சின்ன கட்டிகளாக மாற்றும் முறையை கண்டுபிடித்தனர். 

பின்னர் அதில் வெண்ணெய் கலந்து மேலும் சில சாக்லேட் வகைகல் கண்டறியப் பட்டன.
 
1876ல் ஸ்விட்சர்லாந்து சாக்லேட் பிரியர் டேனியல் பீட்டர் என்பவர் சாக்லேட்டில் பால் பவுடரை கலந்து மில்க் சாக்லேட் செய்யும் முறையை கண்டறிந்தார். 

இப்போது நாம் சாப்பிடும் பல சாக்லேட் வகைகள் இப்படியாக உருவானது தான். அப்படி உருவான மக்களால் அதிகம் விரும்பப்படும் சில சாக்லேட் வகைகள்.
 
டார்க் சாக்லேட் (Dark Chocolate)
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
உலகம் முழுவதும் மக்கள் விரும்பு உண்ணும் முதல் மூல சாக்லேட் இது தான். இந்த சாக்லேட்டில் 90% கோகோ நிறைந்திருப்பதால் அடர் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். 

இந்த சாக்லேட் சுவைக்கும் போது கசப்பு மற்றும் இனிப்பு கலந்து சுவையை வழங்கும். இதில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்சிடன்ட் காரணமாக உடல் நலத்திற்காகவும் இது பரிந்துரைக்கப் படுகிறது.
 
ரூபி சாக்லேட் (Ruby Chocolate)
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
இந்த ரூபி சாக்லேட் செய்முறையிலும், சுவையிலும் ரொம்ப ஸ்பெஷலானது. இந்த ரூபி சாக்லேட் செய்ய பயன்படுத்தப்படும் ரூபி கோகோ பீன்கள் பிரேசில், ஈகுவடார் மற்றும் ஐவரி கோஸ்ட் பகுதிகளில் மட்டுமே விளைகின்றன. 
இந்த ரூபி கோகோவின் சிறப்பம்சமே இதனால் செய்யப்படும் சாக்லேட் பிங்க் நிறத்திலும், சாக்லேட்டின் மணத்துடனும் இருக்கும் என்பது தான். இந்த சாக்லேட்டிற்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகம்.
 
மில்க் சாக்லேட் (Milk Chocolate)
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
கோகோவுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்து இந்த சாக்லேட் தயாரிக்கப் படுகிறது. வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த சாக்லேட்டில் பாலின் மணமும், இனிப்பு சுவையும், கொஞ்சமாக சாக்லேட் மணமும் இருக்கும்.

டார்க் சாக்லேட்டை விட இனிப்பு சற்று கூடுதலாக இருக்கும் இந்த சாக்லேட் ஸ்வீட் டூத் உள்ளவர்கள் விரும்பும் வகை.
 
வொயிட் சாக்லேட் (White Chocolate)
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
இந்த சாக்லேட் கோகோ துகள்களை நீக்கி விட்டு கோகோவால் தயாரிக்கப்பட்ட கோகோ பட்டர், சர்க்கரை மற்றும் பால் கலந்து தயாரிக்கப் படுகிறது. 

முழு வெள்ளையாக இல்லாமல் ஐவரி நிறத்தில் காணப்படும் இந்த சாக்லேட் வெண்ணிலா சுவையுடன் இருக்கும்.
லிக்கர் சாக்லேட் (Liquor Chocolate)
குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் வகைகள் எத்தனை?
இந்த சாக்லேட் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. ஆல்கஹால் மது நிரப்பப்பட்ட சாக்லேட் இது. 

உள்ளே மதுவும் வெளியே சாக்லேட் சுவரும் அமைக்கப்பட்டு க்யூப், ஹார்ட் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இது கிடைக்கிறது.
இது தவிர இனிப்பே இல்லாத சாக்லேட், கொஞ்சம் இனிப்புள்ள சாக்லேட் என சர்க்கரை வியாதி உள்ளவர்களையும் சுவைக்க செய்ய பல விதமான சாக்லேட்டுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. 

அவரவர் சுவை விருப்பத்தை பொறுத்தி விருப்பமான சாக்லேட்டுகளை சுவைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)