மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?

0
பொதுவாக சோயா பீன்ஸில் இருந்து பல வகையான உணவு பொருட்கள் தயாரிக்கப் படுகிறது. அதாவது சோயா பால், சோயா சாஸ், சோயா எண்ணெய் ஆகிய உணவு பொருட்கள் கிடைக்கிறது.
மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?
அதில் குறிப்பாக சோயா பீன்ஸில் இருந்து எண்ணெய் தயாரித்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் கழிவு தான் இந்த மீல் மேக்கர் ஆகும்.
வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நாளில் மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். 

இது நிச்சயம் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த மீல் மேக்கர் மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

பட்டை – 1 சிறிய துண்டு
 
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
 
சோம்பு – 1 டீஸ்பூன்
 
சீரகம் – 1 டீஸ்பூன்
 
பிரியாணி இலை – 1
 
பச்சை மிளகாய் – 2
 
மீல் மேக்கர் – 1 கப்
 
பால் – 1/2 கப்
 
கொத்தமல்லி – சிறிது
 
உப்பு – சுவைக்கேற்ப
 
தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
 
வெங்காயம் – 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)
 
உருளைக்கிழங்கு – 1 (பெரியது, தோலுரித்து துண்டுகளாக்கப் பட்டது)

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி? 

செய்முறை : .
 மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?
முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டி விட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப் படியான நீரைப் பிழிந்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

உணவுக்குழாய் எதனால் பாதிக்கப்படைகிறது? தெரியுமா? 

அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 
பின்பு அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
 
உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
 
இறுதியாக அதில் பால் ஊற்றி, கொத்த மல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)