இட்லி தோசைக்கு பிரண்டை பொடி செய்வது எப்படி?

இட்லி தோசைக்கு பிரண்டை பொடி செய்வது எப்படி?

0
எலும்புகள் சந்திக்கக் கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கி விடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். 
இட்லி தோசைக்கு பிரண்டை பொடி செய்வது எப்படி?
மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக் கொள்ளும். 
இதனால் பாதிக்கப் பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப் படுவார்கள். இந்தப் பாதிப்புகளிள் இருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும். 

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்து விடும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். 

மேலும் பிரண்டையை நெய் விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் : .
 
பிரண்டை - 3 கப்
 
உளுந்தம் பருப்பு - 1 கப்
 
கடலை பருப்பு - அரை கப்
 
வரமிளகாய் - 1 கைப்பிடி அல்லது காரத்துக்கேற்ப
 
கருப்பு எள்ளு - 5 டீஸ்பூன்
 
பெருங்காயம் - கட்டியாக
 
உப்பு - தேவைக்கேற்ப
 
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை : .
இட்லி தோசைக்கு பிரண்டை பொடி செய்வது எப்படி?
பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி ஆற விடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்து கொள்ளுங்கள். 

தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும். 
இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். 

சாதத்தில் பொடியை கலந்து நெய் விட்டும் சாப்பிடலாம். இப்போது பிரண்டை பொடி ரெடி, இதை எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)