சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?





சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?

0
உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறை யினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல.
சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?
காலை உணவில் முட்டை எடுத்துக் கொண்டால், அன்றைய நாளில் உங்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி முழுமையாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். 
முட்டைகள் எப்போதும் ஆற்றலை மெல்ல, மெல்ல ரிலீஸ் செய்யும். இதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை செரிமானத்தை தாமதப் படுத்தும். ஆக, பசியின்றி நீண்ட நேரம் பணி செய்யலாம். 

பல்வேறு வகையான நோய்களை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்க முட்டைகள் வழிவகை செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

குறிப்பாக, இதில் உள்ள செலனீயம் என்ற சத்து இம்யூன் பூஸ்டராக செயல்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒரு உணவு. 

இதை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள். 

நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு எடுத்து செல்ல இவை மிகவும் உகந்தது. சரி, இனி முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
 
முட்டை - 6
 
பிரட் - 4
 
பெரிய வெங்காயம் - 3
 
தக்காளி - 3
 
குடை மிளகாய் - 1
 
பச்சை மிளகாய் - 3
 
பல் பூண்டு - 5
 
இஞ்சி - 1 துண்டு
 
எலுமிச்சம் பழம் - ½
 
கரம் மசாலா - 1 மேஜைக் கரண்டி
 
சாண்ட்விச் மசாலா - 1 மேஜைக் கரண்டி
 
மிளகாய் தூள் - தேவையான அளவு
 
சீரகம் - 1 மேஜைக் கரண்டி
 
மஞ்சள் தூள் - ½ மேஜைக் கரண்டி
 
மல்லி தூள் - 1 மேஜைக் கரண்டி
 
வெண்ணெய் - தேவையான அளவு
 
சீஸ் - தேவையான அளவு
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - தேவையான அளவு
 
கொத்தமல்லி - தேவையான அளவு
 
புதினா - தேவையான அளவு

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? 

செய்முறை : .
சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?
முதலில் 2 வெங்காயம், 2 தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்த மல்லியை நறுக்கி, ஒரு வெங்காயம் மற்றும் 

ஒரு தக்காளியை வட்ட வடிவில் நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, இஞ்சி, 

நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
 
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முட்டைகளை போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.
 
12 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு முட்டைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். 

எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
 
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 தக்காளி, மஞ்சள் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (100ml அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு பின்பு அதில் கரம் மசாலா, மற்றும் கொத்த மல்லியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும். 

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும். 

பிறகு ஒரு பிரட்டை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெண்ணெய் மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னியை தடவி 

அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டை கலவை, வட்ட வடிவில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, மற்றும் குடை மிளகாய்யை வைக்கவும்.
 
பின்பு அதில் சிறிதளவு சாண்ட்விச் மசாலா மற்றும் சீஸை துருவி போட்டு பிறகு இன்னொரு பிரட்டை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெண்ணெய்யை தடவி அதன் மேல் வைத்து அதை லேசாக அழுத்தி விடவும்.
 
பின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக் கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
 
வெண்ணெய் உருகியதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அதை ஒரு கரண்டியின் மூலம் லேசாக அழுத்தி விட்டு பின்பு அதன் மேலேயும் சிறிதளவு வெண்ணெய்யை தடவி விடவும்.
பின்னர் ஒரு புறம் அது பொன்னிறமானதும் அதை மறு புறம் பக்குவமாக திருப்பி போட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப்வுடன் பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)