உலகில் பலர் காலை உணவு இல்லாமல்கூட இருப்பார்கள். ஆனால், காபி-டீ இல்லாமல் இருக்க மாட்டார்கள். இதில் காபி குடிப்பதை ஃபேஷனாகவும் தங்களின் சுதந்திரமாகவும் கூட பலர் கருதிக் கொள்கிறார்கள். 
சருமம் புத்துணர்ச்சியாக இருக்க காபிதூளுடன் சர்க்கரை !
காபி குடிப்பதால் உடலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், காபி குடிப்பதால் நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைகிறது என்பது கண்டறியப் பட்டுள்ளது. 
சோர்வாக இருக்கும் போது, ஒரே ஒரு கப் காபி போதும். இன்ஸ்டன்ட் எனர்ஜியை காபி வழங்கும். காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர் உள்ளது.
 
தேவையான பொருட்கள் : .
 
காபி பொடி - 3 டீஸ்பூன்
 
சர்க்கரை - 2 டீஸ்பூன்
 
வைட்டமின் இ ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
 
செய்முறை : .
காபிதூளுடன் சர்க்கரையை கலந்து வைட்டமின் இஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். 
முகத்தை வட்ட வடிவில் ஸ்க்ரப் செய்வது போல் வட்டமாக தேய்த்து வந்தால் முகத்தில் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும். 

அவ்வபோது இதை செய்து வந்தாலே சருமம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.