குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

0

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்கும் மஞ்சளின் உலகளாவிய விநியோகத்தில் ஆண்டுதோறும் இந்தியா சுமார் 78% பங்களிப்பை கொண்டிருக்கிறது. 

குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

அதே நேரம் இந்த அற்புத மசாலா மேற்கு நாடுகள் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. Curcuma longa தாவரத்தின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரபல மசாலா பொருளாக இருக்கிறது மஞ்சள். 

இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகை சிகிச்சையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கல்லீரலை பாதுகாக்க என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை மஞ்சள் கொண்டுள்ளது. 

எனவே உங்களது டயட்டில் தினசரி 1 டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும்.

இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது: மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதி பொருளில் குர்குமின் குறிப்பிடததகுந்த ஒன்று. இது இதயத்திற்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

இதற்கு முக்கிய காரணம் இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள். மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமினானது ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் தமனிகள் குறுகுவதை தடுக்கவும் உதவும் என நம்பகமான ஆய்வுகள் கூறுகின்றன. 

மேலும் குர்குமின் பல இதய பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது. 

இந்தியர்கள் அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இது சமைப்பதற்கு மட்டுமின்றி சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது. 

பால்கனியில் இருந்து தூக்கி வீசு - காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன் !

மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்டி முட்டஜெனிக் (antimutagenic), ஆன்டி கார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள்.

குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும், அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

எந்த நோயையும் தடுக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. 

குறிப்பாக அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குளிர் காலத்தில் உணவில் அதிகமாக மஞ்சள் இடம் பெறுவதை உறுதி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

ஆடைகளை களைந்து நடனம் ஆடிய திருநங்கைகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள் !

இதன் காரணமாக எந்த வித நோயும் குளிர்காலத்தில் வராது குறிப்பாக தொண்டைப்புண் போன்ற பிரச்சனைக ளிலிருந்து மஞ்சள் நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)