வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !

வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !

0

பலரும் உணவில் பிரியாணி இலை வெறும் நறுமணத்திற்காகத் தான் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பிரியாணி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !

சொல்லப் போனால் பிரியாணி இலையில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

பிரியாணி இலை எதற்காக?

பிரியாணி இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச் சத்துக்களான கால்சியம், 

பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். 

அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா?

டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

பிரியாணி இலையின் நன்மைகள் :

மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். அதற்காக யோகா, தியானம் என பல வழிகளை தேடி செல்கிறோம்.

அதற்கு எளிய வழியாக நம் வீட்டில் இருக்கும் பிரியாணி இலை தீர்வாகிறது.

இதை கண்டுபிடித்தவர் ரஷ்ய ஆய்வாளர் கென்னடி. இவரின் கூற்றுப்படி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறியுள்ளார்.

முதல் கட்டமாக மனதை அமைதி அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். 

வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !

பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து மனதை அமைதியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.

ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

மேலும் பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)