சுவையான மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் செய்வது எப்படி?





சுவையான மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் செய்வது எப்படி?

0

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

சுவையான மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் செய்வது எப்படி?
இதனால் உடல் ஆரோக்கியதிற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.

கோடை காலமாக இருந்தாலும் சரி, அடைமழையாக இருந்தாலும் சரி, பழங்களிலேயே வாழைப்பழம் மட்டும் தான் நமக்கு எப்போதுமே கிடைக்கும். 

அந்த வகையில் வாழைப்பழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான கேக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !

தேவையான பொருட்கள் :

மைதா மாவு : ¼ கிலோ

சக்கரைப் பவுடர் : ¼ கிலோ

வெண்ணெய் : 200 கிராம்

வாழைப்பழம் : 8

முந்திரி, பாதாம், உலர் திராட்சை : 1 கப்

பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்

சமையல் சோடா : 1/2 ஸ்பூன்

முட்டை : 4

வாழைப்பழ எசன்ஸ் : 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா : 1 ஸ்பூன்

மோர் - 1 கப்

நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !

செய்முறை :

சுவையான மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். 

வெண்ணெய் சர்க்கரை நன்றாக கலந்து மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும். 

முந்திரி பழம் அளிக்கும் மருந்து !

பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் மோர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 

திக்கான பதம் வந்ததும், அதனுடன் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் கேக் ட்ரேயில், வெண்ணெய் தடவி, சேர்த்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து, 

மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து, அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேக வைக்கவும். 

இதனை தொடர்ந்து கேக் நன்கு வந்துள்ளதா என சரி பார்த்து எடுக்கவும். பிறகு ஆற வைத்து துண்டுகளாக பரிமாறவும்.

குறிப்புகள் :

உங்களிடம் மோர் இல்லை என்றால், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும் அல்லது வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். பின்னர் 1 கப் பாலை அதனுடன் சேர்க்கலாம்.

உலர் திராட்சை, பாதாம், முந்திரிகளை நெய் அல்லது வெண்ணெயில் வறுக்கவும். இது கேக்கிற்கு கூடுதல் சுவை தரும்.

நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் ஸ்ட்ராபெர்ரி !

உங்களிடம் இன்னும் சில வாழைப்பழங்கள் இருந்தால், அவற்றை நறுக்கி, தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து அலங்கரிக்கலாம்.

கூடுதல் சுவைகளுக்கு கேக்கில் இலவங்கப் பட்டை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயைச் சேர்க்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)