Recent

featured/random

ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை !

0

உடலின் அன்றாட இயக்கத்துக்கு, தசைகளின் பராமரிப்பு, வளர்ச்சி, உருவாக்கத்துக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். 

ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?
ஆனால், சைவ உணவு சாப்பிடும் பலரின் மனதில் உள்ள கேள்வி, அசைவம் சாப்பிடுபவர்கள் போல, உடலுக்குத் தேவையான புரதம் சைவ உணவில் உள்ளதா என்பது தான். 

உடலுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் சேர்ந்த கலவையைத் தான் புரதச்சத்து என்கிறோம். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம். 

சைவம் மற்றும் அசைவ உணவுகளில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. அசைவம் மூலமாகக் கிடைக்கும் புரதத்துக்கு இணையாக, புரதம் நிறைந்த சைவ உணவுகளும் உள்ளன.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?

ஒருவரின் எடை மற்றும் உடல் அமைப்பைப் பொறுத்து புரதத் தேவை அளவு நிர்ணயிக்கப் படுகிறது. சராசரியாக, ஒரு கிலோ எடைக்கு 0.8 முதல் ஒரு கிராம் வரை புரதம் தேவைப்படும். 

ஒருவர் 70 கிலோ எடை இருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு 67 முதல் 70 கிராம் புரதம் தேவைப் படலாம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர் புரதத்தை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது?

சைவம் சாப்பிடும், 70 கிலோ எடையுள்ள நபர் தினமும், பயறு வகைகள், சோயா, பால், பருப்பு வகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், 70 கிராம் அளவுக்குப் புரதச் சத்தைப் பெறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !