மொலாசஸ் என்றால் என்ன? தெரியுமா?

மொலாசஸ் என்றால் என்ன? தெரியுமா?

0

தாவரப் பொருட்களில் இருந்து சாறு பிழியும் போது கிடைக்கும் உப பொருள் மொலாசஸ். இது அடர்த்தியான சர்க்கரை, ஹெமி செல்லுலோஸ் மற்றும் தாது உப்புக்கள் கொண்ட கரைசல்.

மொலாசஸ் என்றால் என்ன? தெரியுமா?

குறிப்பாக கரும்பு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சர்க்கரையாகச் சுத்திகரிப்பதன் விளைவாக உருவாகும் ஒரு பிசுபிசுப்பான பொருளாகும் இந்த மொலஸ்ஸ் (Molases).

கால் நரம்பு முடிச்சை (வெரிகோஸ் நரம்பு முடிச்சி) எவ்வாறு குணப்படுத்தலாம்?

கரும்பு மொலாசஸ், பீட் (பீட்ரூட்) மொலாசஸ், சிட்ரஸ் (ஆரஞ்ச், திராட்சை) மொலாசஸ், மர (பேப்பர் உற்பத்தியின் போது கிடைப்பது) மொலாசஸ் என நான்கு வகை மொலாசஸ் கிடைக்கிறது.

கரும்பு மொலாசஸ் சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருள். இதில் 3 சதவீத புரதம், 10 சதவீத சாம்பல் உள்ளது.

இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்கவும், விலையை கட்டுப்படுத்தவும் மொலாசசில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படுகிறது.

மொலாசஸ் சர்க்கரையின் அளவு, பிரித்தெடுக்கும் முறை மற்றும் தாவரத்தின் வயது ஆகியவற்றில் வேறுபடுகிறது.

கரும்பு மொலாசஸ் முதன்மையாக உணவுகளை இனிமையாக்கவும் சுவைக்கவும் பயன்படுகிறது. நல்ல வணிக பழுப்பு சர்க்கரையின் முக்கிய அங்கமாக மொலாசஸ் உள்ளது.

கால் நரம்பு முடிச்சு என்றால் என்ன?

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் மொலாசஸ் இலகுவான தரங்கள் உண்ணக் கூடியவை, அவை பேக்கிங் மற்றும் மிட்டாய் தயாரிப்பிலும் ரம் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகின்றன.

பிளாக்ஸ்ட்ராப் மற்றும் பிற குறைந்த தர கரும்பு மொலாசஸ் கலப்பு கால்நடை தீவனத்திலும், வினிகர், சிட்ரிக் அமிலம் மற்றும் பிற பொருட்களின் தொழில்துறை உற்பத்தியிலும் பயன்படுத்தப் படுகின்றன. 

முக்கியமாக மது தயாரிப்பில் பயன்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)