குறைந்த செலவில் மாடர்ன் விறகு அடுப்பு !

குறைந்த செலவில் மாடர்ன் விறகு அடுப்பு !

0

இரண்டு வருடங்களுக்கு முன்பு 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு சிலிண்டர் இன்றைய தேதியில் 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. 

குறைந்த செலவில் மாடர்ன் விறகு அடுப்பு !

ரோட்டோர இட்லி கடை, பிரியாணி கடை போன்ற சிறு சிறு கடைகள் நடத்துபவர்கள் சிலிண்டருக்காக மாதம் 10000 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளனர். 

நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள்

சிலிண்டர் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள இவர்களுக்காக சந்தையில் நவீன வடிவில் விறகு அடுப்பு விற்பனைக்கு வந்துள்ளது.

ஐந்தாயிரம் ரூபாயில் தொடங்கி ஒன்றரை லட்சம் வரை விற்பனையாகும் இந்த விறகு அடுப்பில் சமையல் செலவு பாதியாக குறையும் என்று கூறுகின்றனர். 

வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் அடுப்பு என்றால் ஐந்து முதல் பத்தாயிரத்தில் கிடைக்கிறது. 

வீட்டு உபயோகத்துக்காக இருந்தாலும் சற்று பெரிய அடுப்பு வேண்டு மென்றால் 20000 ரூபாய் செலவழித்து வாங்கிக் கொள்ளலாம். 

ஹோட்டல்களுக்கு தேவைப்படும் அடுப்புகளின் விலை தான் ஒன்றரை லட்சமாகும். இந்த நவீன விறகு அடுப்புக்கு சிறிதளவு மின்சாரமும் தேவைப்படுகிறது. 

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி !

ஊதுகுழல் வைத்து ஊதி நெருப்பை வரவழைக்கும் நேரத்தில் காற்று சீரான முறையில் சென்று நெருப்பை பற்ற வைத்து அனைத்து விறகுகளையும் எரிய வைக்க வேண்டும் என்பதற்காக இதில் 'புளோயர்' பயன்படுத்தப் படுகிறது. 

ஒரு குண்டு பல்புக்கு செலவாகும் மின்சாரம் தான் இந்த அடுப்புக்கும் தேவைப்படும் என்பதால் அதிக செலவாகாது.

மாதம் ஒரு சிலிண்டருக்கு நீங்கள் 1000 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்றால் இந்த அடுப்புக்கு பயன்படுத்தப்படும் விறகுக்காக 200 முதல் 300 ரூபாய் செலவழித்தால் போதுமானது. 

நவீன விறகு அடுப்பில் இருக்கும் மற்றொரு பிளஸ் என்ன வென்றால் இதில் சமைக்கும் போது சமையல் நேரமும் பாதியாக குறைந்து விடுகிறது. 

அந்த காலத்து விறகு அடுப்பை போல இதில் புகையும் அதிகம் வருவதில்லை என்பதால் கண்ணெரிச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது.

நார்ச்சத்து எடுத்துக் கொள்பவர் களுக்கான ஆலோசனைகள்

எனவே சிலிண்டரை கை விட்டு விட்டு இந்த நவீன விறகு அடுப்பை வாங்கி பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார் அதன் விற்பனையாளர் ராஜேந்திரன்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)