சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?





சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?

0

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். 

சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?
அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறிய பின் எடுத்து சாப்பிடலாம். 

இது முடி உதிர்வை தடுக்கும். பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். 

ஹைதராபாத் பிரியாணி செய்முறை !

சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை  பயறை சேர்த்துக் கொள்ளலாம். 

சரி இனி பச்சைப் பயறு கொண்டு சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?  என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருள்கள்: 

பிரெட் துண்டுகள் - 8 

பச்சைப் பயறு - அரை கிண்ணம் 

வெங்காயம் ( நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி 

பச்சை மிளகாய் ( நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி 

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி 

கேரட் ( துருவியது) - 2 மேசைக்கரண்டி 

வெள்ளரிக்காய் - 2 மேசைக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு 

ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை !

செய்முறை: 

சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?

பச்சைப் பயிறை எட்டு மணி நேரம் ஊற வைத்து வடித்து ஈரத்துணியால் கட்டி எட்டு மணி நேரம் மீண்டும் வைக்கவும். 

பிறகு கொதிக்கும் தண்ணீரில் இந்த முளைக்கட்டிய பச்சை பயறைப் போட்டு நீரை வடிக்கவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கி வைக்கவும். 

சிறுவர்களின் உடலில் பட்ட உடன் பல்ப் எரியும் அதிசியம் !

பச்சை பயரையும் மற்ற பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். 

ஒரு பிரெட் துண்டில் இந்தக் கலவையை வைத்து மற்றொரு துண்டால் மூடவும். மற்ற பிரெட் துண்டுகளிலும் இதே மாதிரி செய்யவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)