அசத்தலான மட்டன் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?





அசத்தலான மட்டன் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?

0

அசைவ உணவில் மட்டன் எனும் ஆட்டிறைச்சி மட்டும் மிகவும் ஆரோக்கியமானது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. 

அசத்தலான மட்டன் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?
ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர் களுக்கு மருத்துவ பயன் தருகிறது. 

உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளை விக்கிறது ஆட்டு இறைச்சி. பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுக்கும். 

அந்தரங்க வாழ்க்கையில் அஷ்வகந்தாவின் முக்கிய பயன் !

வாரத்தில் ஒரு முறை ஆட்டிறைச்சியை சாப்பிட்டு வந்தால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த செய்யும்.  

சரி இனி ஆட்டிறைச்சி கொண்டு அசத்தலான மட்டன் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையானவை :.

கொத்துக்கறி – ஒரு கப்

பாசுமதி அரிசி – 2 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

பட்டை, கிராம்பு, பிரியாணி இலை.

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

புதினா-மல்லி – கால் கப்

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

வெங்காயம், தக்காளி – தலா 1

உப்பு – தேவையான அளவு

ஆண்மை பெரு​க பால் கஞ்சி - ஆரோக்கிய நன்மைகள் !

செய்முறை :.

அசத்தலான மட்டன் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் சாதத்தை முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக் கறியை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

வேறு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.

ஆண்களின் விரல் சொல்லும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வர்கள் என்று !

இதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், வேக வைத்த கொத்துக்கறி, உப்பு சேர்த்துக் கிளறவும். 

தண்ணீர் வற்றி வரும்போது சாதம், புதினா, மல்லி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)