சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

0

உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன். என்னதான் வகை வகையான அசைவ உணவு இருப்பினும் சிக்கன் சுவை தனிசுவையே ஆகும். 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். 

அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில்  சிக்கன் தீமை என்று கூறுபவர் அதிகம். ஏனேனில் அவர்களுக்கு சிக்கன் நன்மைகள் தெரியாது. 

அடுத்த முறை சிக்கன் தீமை என யாராவது கூறினால் கீழ் உள்ள குறிப்பு ஒன்றை சொல்லுங்கள். அளவாக சாப்பிட்டால் சிக்கன் நன்மையை தரும். 

அதிக ப்ரோடீன் :

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

சிக்கன் 100 கிராமுக்கு 31 கிராம் ப்ரோடீன்(புரதம் ) உள்ளதால், சிக்கன்  புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். 

நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச் செய்ய முக்கியமானது ஆகும்.

பொதுவாக, தினசரி ப்ரோடீன்  தேவை = 1 கிலோ உடல் எடைக்கு  1 கிராம் ப்ரோடீன்  தேவை. விளையாட்டு வீரர்களுக்கு,  தினசரி ப்ரோடீன்  தேவை ஒரு பவுண்டுக்கு (Pound) 0.6 கிராம் முதல் 0.9 கிராம் வரை இருக்கும்.

வைட்டமின்கள்:

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

சிக்கனில்  உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், 

பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.  

ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் அவை உதவியாக இருக்கும். சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும், 

அதனால் எலும்பு வலுப்பெரும். வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும், மேலும் தசை செயல்பாடு மற்றும் இரத்த சோகையை அகற்ற உதவுகின்றன.

பொட்டாசியம் மற்றும் சோடியம் எலக்ட்ரோலைட்டுகள் (உடலில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்).

பாஸ்பரஸ்  என்பது  உடல் பலவீனம், எலும்பு ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு, பல் பராமரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறது.

தசைகளை வலுவடையச் செய்யும் 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

சிக்கனில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே பாடி பில்டர் போன்று தசைகள் வேண்டு மென்பவர்கள், சிக்கனை வேக வைத்து அதிகம் சாப்பிட வேண்டும்.

எடை இழப்பு: 

அதிக அளவு ப்ரோடீன்  கொண்ட உணவுகள் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைப்பதில் சிக்கன்  முக்கிய பங்கு வகிக்கும். 

சிக்கன் தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு  குறிப்பிடத்தக்க எடை கட்டுப்பாடு காணப்பட்டதாக ஆய்வுகள் மற்றும் சோதனைகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு சிக்கனில் உள்ள  அதிக ப்ரோடீன் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக இருக்கலாம்.

குறைவான கொழுப்பு:

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆடு இறைச்சி  ஆகியவையில் காணப்படும்  கொழுப்பின் அளவு கோழி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படும் அளவை விட மிக அதிகம். 

எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உருவாகும் அபாயம் கோழி இறைச்சிக்கு குறைவு.

சிக்கன்  அல்லது மீனை சரியான அளவு உட்கொள்வது நல்லது. அளவுக்கு மீறினால் இதய நோய்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்:

சிக்கன் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

சிக்கனில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

அதிலும் அந்த சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.

கேன்சர் (cancer) எதிர்ப்பு  பண்புகள்: 

சைவ உணவு உண்பவர்கள், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி அதிக அளவு  உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

அதே நேரத்தில் சிக்கன்  மற்றும் மீன் சாப்பிடுபவர்களின் பிற்கால வாழ்க்கையில்  புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து குறைத்துள்ளது. 

இருப்பினும் இதற்கு  சான்றுகள் உறுதியானது  இல்லை. சிக்கன்  பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

சிக்கன் மருந்து.

சூடான கோழி சூப்பை உட்கொள்வது சளி நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

சிக்கன் பாதுகாப்பாக சமைக்கும் முறை: 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

குளிர்சாதன பெட்டியில் சிக்கனை வைப்பதினால் நோய்க்கிருமிகள் கொள்ளப்படுவதில்லை. நோய்க்கிருமிகள் பெருகுவதை மட்டுமே தடுக்க முடியும். நோய்க்கிருமிகளை கொல்ல சிக்கனை 73.9 செல்சியஸ் சூடுபடுத்த வேண்டும்.

விரைவில் செய்யக்கூடிய எளிய சிக்கன் சமையல்.

சிக்கன் salad:

ஒரு பாத்திரத்தில் வறுத்த சிக்கன், செர்ரி, விதை இல்லாத திராட்சை, துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிள், நறுக்கிய வெங்காயம், வேக வைத்த காளான்கள் சேர்த்து நன்கு கலக்கவும். 

தேவையான உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். பிறகு இந்த ஆரோக்கியமான salad சாப்பிடவும். 

மேலும் உங்கள் சமூக வட்டாரங்களில் இந்த இணைப்பை (Link) பகிர்ந்து கொள்ளவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)