எளிமையான முறையில் போண்டா சூப் செய்வது எப்படி?





எளிமையான முறையில் போண்டா சூப் செய்வது எப்படி?

0

இது கர்நாடகாவின் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் ஃபுட் எனலாம். இதற்காக கர்நாடகா வரை போக வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம்.

எளிமையான முறையில் போண்டா சூப் செய்வது எப்படி?
போண்டா என்றாலே அதை மாலையில் ஒரு காகிதத்தில் வைத்து பிச்சி சாப்பிட்டு பின் ஒரு கப் டீ குடிப்பது தான் பலருக்கும் வழக்கமாக இருக்கும். 

ஆனால் இது தயிர் வடை போல போண்டா சூப். போண்டாவை சூப்பில் ஊற வைத்து சாப்பிடும் சுவையும் தனி ரகம்தான். இது கர்நாடகாவின் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் ஃபுட் எனலாம். 

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !

இதற்காக கர்நாடகா வரை போக வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். 

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1கப்

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 tsp

சீரகம் - 1/2 tsp

உப்பு - தே.அ

கறிவேப்பிலை - சிறிதளவு

சூப் செய்ய பொருட்கள் :

எண்ணெய் - 250 கிராம்

துவரம் கருப்பு - 1/2 கப்

கடுகு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் -1

தக்காளி - 1

உப்பு - தே.அ

மஞ்சள் தூள் - 1/4 tsp

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

எலுமிச்சை சாறு - 1 tsp

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !

செய்முறை :

எளிமையான முறையில் போண்டா சூப் செய்வது எப்படி?

உளுத்தம் பருப்பை 2 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள். பின் அதை மெது வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த மாவில் துருவிய தேங்காய், பொடியா நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி , சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

பின் அதை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து போண்டா பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய வையுங்கள்.

காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சம் மாவு எடுத்து உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி அனைத்து மாவிலும் போண்டா சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக சூப் செய்ய...

அதற்கு முதலில் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று காய வையுங்கள்.

பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

இப்போது மசித்த பருப்பு சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள். பின் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?

பின் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் சூப் ரெடி. இப்போது ஒரு போண்டா வைத்து அது மூழ்கும் அளவுக்கு இந்த சூப்பை ஊற்றி பரிமாறுங்கள். அவ்வளவு தான் போண்டா சூப் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)