கூந்தல் அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள் !





கூந்தல் அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள் !

0

அரிசி கழுவிய நீர் அதாவது களனி தண்ணீர் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது மற்றும் தாவரங்கள் வேகமாக வளர உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. 

கூந்தல் அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள் !

ஆனால் அரிசி கழுவிய நீரின் சில அழகு சார்ந்த நன்மைகள் பற்றி நமக்கு தெரியாது. ஆம், அரிசி நீரை உடலுக்கும், ஆரோக்கியமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

கொரோனா பரவமா தடுக்க இந்த உணவுகளை கொடுங்க !

இந்த அதிசய தண்ணீரின் பின்னணியில் உள்ள அறிவியல் அதன் கலவை ஆகும். அரிசி நீர் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் ஆனது. 

வரலாற்று ரீதியாக, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து பாலின மக்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். 

உண்மையில், சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில், அரிசி நீர் காலங்காலமாக அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

அரிசி நீரால் முடி வளர்ச்சியையும் அதன் மற்ற நன்மைகளை கொண்டு நம் தோல் மற்றும் உடலுக்கும் நன்மைகளை அதிகரிக்க முடியுமா என்று பார்ப்போம்.

முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி நீரின் புரதம் ஒட்டு மொத்த முடியையும் மேம்படுத்த உதவுகிறது.

கருப்பாக இருக்கும் அந்தரங்க பகுதியை வெண்மையாக்க எளிய வழி !

அரிசி நீரில் முடி மீளுருவாக்கம் செய்ய உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின் சி, பி மற்றும் ஈ ஆகியவையும் உள்ளன.

முடி ஆரோக்கியமாக இருக்க ஈரப்பதம் தேவை என்றாலும், அதிக ஈரப்பதம் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்க கூடியது. 

எனவே அதிகப்படியான ஈரப்பதத்தை சீரமைக்க விரும்பினால் புரதம் நிறைந்த அரிசி நீர் அதற்கு கைகொடுக்கும்.

அரிசி தண்ணீர் முடி இழைகளை மென்மையாக்க கூடியது. அரிசி தண்ணீரில் ஈரப்பதமூட்டும் புரதங்கள் உள்ளன, அவை உங்கள் தலைமுடியில் ஏற்படும் சேதங்களை சரி செய்யக்கூடியவை.

கூந்தலுக்கு அரிசி தண்ணீரை பயன்படுத்துவது எப்படி?

கடைகளில் அதிக பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் கன்டிஷ்னரை விடவும் அரிசி தண்ணீர் சிறப்பாக செயல்படக் கூடியது. 

ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்றாக அலசிய பின்னர், இறுதியாக அரிசி தண்ணீர் கொண்டு தலையை நன்றாக அலச வேண்டும்.

குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவம் !

உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். 

இதன் மூலம் அரிசி தண்ணீர் உங்கள் உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க முடியும். பிறகு வெறும் தண்ணீரால் தலையை அலசினால் மட்டும் போதும்.

இப்படித்தான் கொரிய மற்றும் ஜப்பானைச் சேர்ந்த பெண்கள் அழகான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை அரிசி தண்ணீர் மூலம் பராமரிக்கின்றனர். 

கூந்தல் அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள் !

இதே முறையை நீங்கள் சில முறை பின்பற்றினாலே வித்தியாசத்தைக் காண முடியும். அரிசி நீர் ஆரோக்கிய நன்மைகளை நிரூபித்துள்ளது. 

முடி மற்றும் தோலில் அதன் முடிவுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு சோதிக்கப்பட்டன. 

மார்பக காம்பில் இந்த பிரச்சனை இருந்தால் இத யூஸ் பண்ணுங்க !

அரிசி நீரைப் பயன்படுத்தும் போது, விரைவான முடிவுகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சரியான செய்முறையைப் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)