உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?





உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

0

சில வகையான ரவைகள் நன்றாக பொடி செய்யப்பட்டிருக்கும் மற்றும் சில வகையான ரவைகள் குருனைப் போன்று இருக்கும். 

உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பொதுவாக நாம் அனைவரும் இந்த கோதுமையை சப்பாத்தி செய்வதற்காக பயன்படுத்துவோம். தென்னிந்தியாவில் இந்த ரவையைக் கொண்டு உப்புமா தயாரிக்கிறார்கள். 

உப்புமா என்றாலே குழந்தைகள் தெறித்து ஓடுவார்கள்... ஏன் பெரியவர்கள் கூட பலருக்கு வெறுப்பு தான். ஆனால் உப்புமா சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. 

ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

உப்புமாவில் நிறைந்துள்ள வைட்டமின்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

இந்த உப்புமாவை நாம் எடுத்துக்கொள்ளும் போது நாம் மிக சுறுசுறுப்பாக உணரமுடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூட கூறுகின்றனர். 

மேலும் இந்த உப்புமா உடன் சில காய்கறிகளையும் சேர்த்து சமைக்கும் பொழுது, இதில் நிரம்பியுள்ள புரதச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

ரவையில் நிரம்பியுள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது.

உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ரவை உப்புமாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை.மேலும் இதில் உள்ள மெக்னீசியம் தாது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.

அவலில் செய்த உப்புமாவோ, ஆரோக்கியமானது. முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது என்று சில சித்த மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.

வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

இந்த உப்புமாவில் இருக்கும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள், நமது உடலின் நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. 

உப்புமா வில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால், ரத்த சோகை போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது நமது உடலில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. 

உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த உணவுடன் நீங்கள் பல்வேறு வகையான பருப்புகள் ஆன, முந்திரி, நிலக்கடலை போன்றவற்றை சேர்த்து சமைக்கலாம். 

இது நமது உணவை சுவையுள்ளதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், அதிக அளவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் தருகிறது.

ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?

இத்தனை நன்மைகள் உள்ள இந்த உப்புமாவை காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நாம் மேற்கூறிய அனைத்து பயன்களையும் பெறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)