நாவில் கரையும் சுவையான வாழைப்பழ பர்பி செய்வது எப்படி?





நாவில் கரையும் சுவையான வாழைப்பழ பர்பி செய்வது எப்படி?

0

உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. 

நாவில் கரையும் சுவையான வாழைப்பழ பர்பி செய்வது எப்படி?
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும்  இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. 

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது  டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. 

உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது பர்ஃபி. அதன்  சுவையின் காரணமாக இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் பர்ஃபியை விரும்பிச் சாப்பிடுகின்றனர். 

அந்த வகையில், நாவில் கரையும் வித்தியாசமான சுவை கொண்ட வாழைப்பழ பர்ஃபி எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த வாழைப்பழம் - 3

வெல்லம் -  100 கிராம்

நெய் - 8 தேக்கரண்டி

கோதுமை மாவு - 150 கிராம்

ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி

பொடித்த பாதாம் - தேவையான அளவு

செய்முறை :

நாவில் கரையும் சுவையான வாழைப்பழ பர்பி செய்வது எப்படி?

தோல் நீக்கிய வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில், வெல்லத்தைப் போட்டு அது கரையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பின்பு வேறொரு பாத்திரத்தில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். 

பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை அதில் கொட்டி 10 நிமிடங்கள் கிளறவும்.

இப்போது அந்தக் கலவையில் வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதன் மேல் 2 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கலந்து இறக்கவும்.  

இந்தக் கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, பொடித்த பாதாமை அதன் மேல் தூவி, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். 

இப்போது நாவில் கரையும் சுவையான வாழைப்பழ பர்ஃபி தயார். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)