டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !





டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !

0

டர்னிப் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய் ஆகும். எனினும் அக்டோபர் முதல் மார்ச் வரை அதிகளவு கிடைக்கிறது.

டர்னிப் கிழங்கினை வாங்கும் முறை எப்படி? தெரியுமா? உங்களுக்கு !

டர்னிப் கிழங்கினை வாங்கும் போது புதிதாகவும், விறைப்பாகவும், அளவில் சிறியதாகவும், கையில் தூக்கும் போது கனமானதாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.
அளவில் பெரிய, புள்ளிகளுடன் காயம்பட்ட கிழங்குகளைத் தவிர்க்கவும். பைகளில் இக்காயினை வைத்து குளிர்பதனப் பெட்டியில் சில வாரங்கள் வைத்திருந்து பயன் படுத்தலாம்.

டர்னிப்பினை பயன்படுத்தும் போது நன்கு கழுவி மேல்புற தோலினை நீக்கி பயன்படுத்தப் படுகிறது. டர்னிப்பினை அப்படியேவோ சமைத்தோ உண்ணலாம். 

ஊறுகாய்கள், சாலட்டுகள் தயார் செய்ய இக்காய் பயன்படுகிறது. உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் ஏற்பட்டு வருவதால், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் அதிக அளவில் பரவி வருகிறது. 
எனவே, இத்தனை நலன்களை உள்ளடக்கி இருக்கும் டர்னிப்பினையும் நாமே விளைவித்து, செயற்கை பூச்சி கொல்லிகளால் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நோய்களிலிருந்து தப்பித்து நலமாக வாழலாம்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)