சுவையான கீரை தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

0

தேங்காய்ப்பாலை ஓர் அதிசயமான மருந்து என்றே சொல்லலாம். இதன் முதல் பயன், உடல் சூட்டைக் குறைப்பது. ஒல்லியானவர்களைச் சற்று பூசினாற் போல பளபளப்பாக மாற்றுவது இதன் தனித்தன்மை.

சுவையான கீரை தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?
வாய்ப்புண், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது. தேங்காய்ப்பாலில் உள்ள நன்மை தரும் பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். 

மென்மையான எலும்புகளைக் கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேங்காய்ப்பாலைத் தடவி சூரிய ஒளியில் நிற்க வைத்துச் சூரியக் குளியலாடச் செய்யலாம்.  

சரி இனி தேங்காய்ப்பால் கொண்டு சுவையான கீரை தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

சுகப்பிரசவம் நடைபெற என்ன செய்ய வேண்டும்?

தேவையான பொருட்கள் :.

கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 7

சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒரு கப்

பூண்டு - 4 பல்

உப்பு - தேவையான அளவு

காதலிக்காமல் வெறுக்கும் பெண்ணா நீங்கள் !

செய்முறை :.

சுவையான கீரை தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள் 

ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும்.

கர்ப்பமான பெண்கள் கவனிக்க வேண்டியவை !

ஆறிய பின் மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரைக் கலவை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மேலே மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். சூப்பரான கீரை தேங்காய்ப்பால் சூப் ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !