எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. 

சுவையான எள்ளு மட்டன் குழம்பு செய்வது எப்படி?
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும். 

எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். 

காமம் பற்றி புராணம் சொல்லும் உண்மைகள் என்ன தெரியுமா?

மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளு உருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். எள்ளு உருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. 

வயதானவர்கள் எள்ளு உருண்டையை சிறந்த உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும்.

சரி இனி எள்ளு கொண்டு சுவையான எள்ளு மட்டன் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மட்டன் - ½ கிலோ

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

எள்ளு -2  ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பூண்டு - 10 பல்

முருங்கைக்காய் - 1

உருளை கிழங்கு – 1

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு - 2 துண்டு

நட்சத்திர மொக்கு - 1

முந்திரி - 6

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

தயிர் - ¼ கப்

வெங்காயம் - 2

தக்காளி - 2

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் !

செய்முறை

சுவையான எள்ளு மட்டன் குழம்பு செய்வது எப்படி?

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, 

சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.

தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் !

பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும். அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள  மட்டனை சேர்க்கவும்.

ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் தெரியுமா?

பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான எள்ளு  மட்டன் குழம்பு ரெடி.