பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !





பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

0

செரிமான மண்டலத்தின் வி.ஐ.பி. உறுப்பு, இரைப்பை! பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைத்து, 

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைக்கும் முக்கியமான உறுப்பு இது. 

நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டியும் இது தான். நேரத்துக்குப் பசி எடுத்து, தேவையான உணவைச் சரியான அளவில் 

ஒருவர் சாப்பிடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்!

வயிற்றின் மேற்புறம் சற்றே இடது பக்கமாகச் சாய்ந்து ஒரு பேரிக்காய் வடிவத்தில் இருக்கிறது, இரைப்பை. 

CFL -சி. எஃப். எல். பல்பு கைத்தவறி விழுந்தால் என்ன ஆகும்?

இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்குகிறது. முன் சிறுகுடலில் முடிகிறது. இதன் கொள்ளளவு சுமார் இரண்டரை லிட்டர். 

இது உணவு இல்லாத போது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும் போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும்.

இரைப்பைச் சுவரில் மியூக்கஸ் சவ்வு (Mucus layer) இருக்கிறது. இதன் சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் என்சைமையும் சுரக்கின்றன. 

இவையே உணவுச் செரிமானத்துக்கு உதவுகின்றன. 

உணவுக்குழாய் மூலம் உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி வேலை செய்து, உணவை உடைத்துக் குழைத்து கூழ் போல் ஆக்குகிறது. 

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

அப்போது உணவில் உள்ள புரதம் செரிமானமாகிறது. இந்த உணவுக் கூழை சிறிது சிறிதாக முன் சிறுகுடலுக்கு அனுப்புகிறது இரைப்பை.

இது சமச்சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. 

கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, அடிக்கடி துரித உணவு சாப்பிடுவது அல்லது 

ஒரு வேளை உணவைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று நாம் சேட்டை செய்தால், இரைப்பைக்குக் கோபம் வந்து எதிர்வினையைக் காட்டும். 

அதில் ஒன்று ஏப்பம்! அவசரமாக சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும், ஸ்ட்ரா மூலம் மென்பானங்களை உறிஞ்சும் போதும் காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். 

ஒரு நொடியில் பகிரும் செய்தியால் ஏற்படும் பிரச்னைகள் !

இந்தக் காற்று இரைப்பையைத் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலுக்குச் சென்றால், வயிறு உப்புதல், வாயு பிரிதல் எனப் பல அவஸ்தைகளை ஏற்படுத்தும். 

இதைத் தடுக்க இயற்கை ஏற்படுத்தியிருக்கிற வசதிதான் ஏப்பம்! இது ஒரு அனிச்சைச் செயலாக நிகழ்கிறது. 

தினசரி அதிக பட்சமாக 20 முறை சிறு ஏப்பம் விடுவது சரி தான். 

ஆனால், நெஞ்சு எரிச்சலுடன் அடிக்கடி ஏப்பம் வந்தால், அது இரைப்பையில் பிரச்னை இருக்கிறது எனச் சொல்லும் அலாரம்!

ஏப்பத்தில் வித்தியாச வகை ஒன்று இருக்கிறது. நோயாளிகள் அவர்களுக்குத் தெரியாமலே ஏப்பத்தை உருவாக்குவார்கள். 

இவர்கள், காற்றை உணவுக் குழாய்க்குள் உறிஞ்சி, ஆவ்வ்வ் என்று சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர்களுக்கு உடலில் நோய் எதுவும் இருக்காது. 

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

கவலை, மன அழுத்தம் போன்ற மனக்கோளாறுகளின் புறவெளிப்பாடாக இது இருக்கும். இதற்காக இவர்கள் நாடுவது சோடா!

என்னிடம் ஒரு நோயாளி வந்தார். டாக்டர், ஆரம்பத்தில் ஏப்பம் விட்டால் இதமாக இருக்கிறது என்று சோடா குடித்துப் பழகி விட்டேன்.

இப்போது இதம் போய் வேதனையாகி விட்டது. ஆனால், சோடாவை விடமுடியவில்லை! என்றார். 

சோடா குடித்து ஏப்பத்தை வரவழைப்பது தவறான பழக்கம் என்பதைப் புரிய வைத்து, மனநல மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்தேன். 

இவரைப் போல் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இரைப்பை காட்டும் அடுத்த எதிர்வினை, எதுக்களித்தல்! 

வேலை தேடுபவர்களுக்கு உதவும் இணைய தளங்கள் !

கேஸ்ட்ரோ ஈசோஃபீஜியல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ் (Gastro esophageal reflux disease-GERD) என்பது மருத்துவப் பெயர். 

நெஞ்செரிச்சல் நோய் (Heart burn) என்பது பட்டப் பெயர். உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. 

இது இறுக்கமாக இருந்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலெழும்பி உணவுக்குழாய்க்குள் செல்ல முடியாது.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், தினமும் மது குடித்தால், 

புகை பிடித்தால் இந்த வால்வு வயதாகிப் போன சல்லடை வலை போல் தொங்கிவிடும். 

இதனால், காப்பாளன் இல்லாத கோட்டைக்குள் எளிதாக நுழைகிற மாதிரி இரைப்பை அமிலம், பெப்சின், பித்தநீர் இம்மூன்றும் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வந்துவிடும். 

அப்போது இதிலுள்ள அமிலம் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதுதான் எதுக்களித்தல்!

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

இது நாட்பட்டு நீடிக்கக்கூடாது. உணவு அடிக்கடி எதுக்களிக்கும் போது, உணவுக்குழாய் சுவர் தடிமனாகி விடுகிறது. 

இதற்கு  பேரட் உணவுக்குழாய் (Barrets esophagus) என்று பெயர். இது புற்றுநோயாக மாறவும் கூடும். பயப்பட வேண்டாம்! 

ஆயிரத்தில் மூன்று பேருக்குத்தான் இப்படி புற்றுநோய் வருகிறது. அதற்குள் இதைச் சரி செய்து விடலாம். 

ஜியோ பைபர் 100 எம்பி பிஎஸ் வேகத்தில் - அடுத்த இலவசம் !

அளவான எடையுடன் இருப்பது, முக்கால் வயிற்றுக்குச் சாப்பிடுவது, உணவு முறையை மாற்றிக் கொள்வது, இடது புறமாகப் படுப்பது, 

படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்திக் கொள்வது போன்றவற்றால் எதுக்களித்தல் பிரச்னைக்கு டாடா காட்டி விடலாம்!

இரைப்பைக்குக் கடுங்கோபம் வரும் போது ஏற்படும் முக்கியமான எதிர்வினை, வயிற்றுவலி! 

செரிமான மண்டலத்தின் முதன்மையான பிரச்னை இது. உணவு முறை மாறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள பிரச்னையும் இதுவே.

100ல் 30 பேருக்கு இப்பிரச்னை உள்ளது என்றால், இதன் கொடுமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

வயிற்று வலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடனடியாக நினைவுக்கு வருவது, அல்சர்! அல்சர் எனப்படும் புண் எப்படி வருகிறது?

இரைப்பையில் சுரக்கும் அமிலம், நெருப்பு மாதிரி வீரியம் வாய்ந்தது. இதை விரலால் தொட்டால் விரலே வெந்து விடும்! 

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

ஆனால், இதைச் சுரக்கிற இரைப்பையை இதனால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இரைப்பைச் சுவர் கடுமையான தற்காப்பு உடையது.

ஆனால் நீரூற்று போல் சீராகச் சுரக்க வேண்டிய அமிலம் புயல்மழை போல் பொழிந்தால், இரைப்பைச் சுவர் 

அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும். அப்படித் திணறும் இடத்தில் புண் உண்டாகும். 

ஜியோ புதுப்பித்துள்ள கட்டண சலுகைகள் என்ன?

இது தான் அல்சர்! இது இரைப்பையில் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர். முன் சிறுகுடலில் ஏற்பட்டால் டியோடினல் அல்சர். இரண்டிலும் இருந்தால் பெப்டிக் அல்சர்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)