சுவையான பிங்கர் சிக்கன் செய்வது எப்படி? #fingerchicken





சுவையான பிங்கர் சிக்கன் செய்வது எப்படி? #fingerchicken

0

அசைவ பிரியர்கள் பலருக்கு தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் இருக்கும். குறிப்பாக ஜிம் செல்பவர்கள் அடிக்கடி அசைவம் சாப்பிடுவார்கள். ஆனால், நம்மில் பலர் தினமும் சிக்கன் சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நம்புகின்றனர். 

சுவையான பிங்கர் சிக்கன் செய்வது எப்படி? #fingerchicken
இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அனைவருக்கும் தெரியும். 

சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 

கோடையில காரம் சாப்பிட்டா !

சளி, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை என பல தொற்றுகளுக்கு இன்றும் சிக்கன் சூப் வீடுகளில் கொடுக்கப்படுகிறது. இது நாசி மற்றும் தொண்டை நெரிசலை குறைக்கும். 

சிக்கன் சூப் நியூட்ரோபில்களின் இடம்பெயர்வைத் தடுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றனர். இது ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்கள், இதன் மூலம் பொதுவான தொற்றுநோய்களின் போது ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். 

அதே போல, சிக்கன் குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ

முட்டை - 1

மைதா - 1 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பேக்கிங் பௌடர் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

பிரட் தூள் - 1 கப்

தயிர் - 1 கப்

இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

கேசரி கலர் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

நீங்கள் ரோட்டுக் கடைகளில் சாப்பிடும் ஆர்வம் உள்ளவரா?

செய்முறை :

சுவையான பிங்கர் சிக்கன் செய்வது எப்படி? #fingerchicken

சிக்கனை வாங்கும் போதே சதைப் பகுதியாக விரல் சைஸுக்கு வெட்டி வாங்கவும். பிறகு, தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து வைக்கவும். முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். 

பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும். பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம்

பிறகு ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின் ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத் தூளைத் தூவி பரிமாறவும். 

வேண்டு மென்றால் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம். இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி! 

குறிப்பு: 

பொரித்த எண்ணெயை மறுபடியும் உபயோகிக்க முடியாது. எனவே, தேவையான அளவு எண்ணெய் மட்டுமே ஊற்றிப் பொரித்தெடுக்கவும்.

காதில் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி?

இந்த ஃபிங்கர் சிக்கன் -ஐ சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)