செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?





செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

0

செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?
நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப் படுவதைப் போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப் படுகிறது.

செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். 

உங்க வீட்ல மிக்ஸி இருக்கா... அப்ப இத கண்டிப்பா படிங்க ! 

தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. 

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக பயன்படுத்தப் படுகின்றன. 

சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

செலரியில் உள்ள சத்துக்கள்

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. 

இவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’ வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. 

செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

செலரியை எப்படித் தேர்வு செய்வது

செலரியின் தண்டுகள் ஃப்ரெஷ்ஷாகவும் உறுதியாகவும் தொய்வு இன்றியும் இருக்க வேண்டும். 

இலைகள் இளம் பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்கலாம். மஞ்சள் அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் இருக்கக் கூடாது.

எப்படி யெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்?

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

செலரியை துண்டுகளாக வெட்டி, எந்த விதமான சாலட் உடனும் கலந்து சாப்பிடலாம்.

செலரி தண்டுகளை பீநட் பட்டர் எனப்படுகிற வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கேரட் ஜூஸ் உடன் செலரி துண்டுகள் சேர்த்துக் குடிக்கலாம்.

சூப், ஸ்டியூ,பொரியல் என எதை  செய்தாலும் மேலே செலரியை நறுக்கித் தூவி சாப்பிடலாம்.

கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

எப்படி சமைப்பது?

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

செலரியின் அடிப்பகுதியை வெட்டி விட்டு, தண்டு மற்றும் இலைகளை குழாயடித் தண்ணீரில் கழுவவும். 

விருப்பமான அளவில் வெட்டிப் பயன்படுத்தலாம். கூடியவரையில் இரண்டு நாட்களுக்குள் செலரியை உபயோகித்து விடுவது சிறந்தது. 

செலரியை திறந்த வெளியில் காற்றோட்டமாக வைப்பது கூடாது. அப்படி வைத்தால் அதிலுள்ள ஈரப்பதம் வற்றி, வதங்கி விடும். 

அருமையான திரங்கா புலாவ் செய்வது எப்படி? 

வதங்கிய செலரியின் மீது லேசாக தண்ணீர் தெளித்து, ஃப்ரிட்ஜினுள் வைத்து எடுத்தால் பழையபடி புதிதாக மாறி விடும். 

அதிகம் கூடாது! செலரி நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுக்கக் கூடாது. 

செலரியில் உப்பின் அளவு சற்றே அதிகம் என்பதால், அதிக உப்பு பிரச்னை உள்ளவர்கள் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?
எடையைக் குறைக்கிற எண்ணத்தில் வெறும் செலரியை மட்டுமே எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். 

அதிக நார்ச்சத்து  வயிற்று உப்புசம், நார்ச்சத்து மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். 

குழந்தைகளுக்கு ரைஸ் மோல்ட் குக்கீஸ் செய்வது எப்படி?

செலரி விதைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி,  

நரம்பு மண்டல இயக்கத்தை சீராக்கக் கூடியவை. தலைவலியையும் விரட்டும் சக்தி கொண்டவை.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல் - 16 கிலோ கலோரிகள்

வைட்டமின் கே - 29.59 மைக்ரோ கிராம்

பொட்டாசியம் - 262.60 மி.கி.

நார்ச்சத்து - 1.40 கிராம்

வைட்டமின் பி2 - 0.06 மி.கி.

வைட்டமின் பி6 - 0.07 மி.கி.

வைட்டமின் சி - 3.13 மி.கி.

கால்சியம் - 40.40 மி.கி.

பாஸ்பரஸ் - 24.24 மி.கி.

மெக்னீசியம் - 11.11 மி.கி.

தாமிரம் - 0.04 மி.கி.

நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால், செலரி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி விடும். 

அமிலத் தன்மை மிகக்குறைவாக இருப்பதால் செலரி, நெஞ்செரிச்சலுக்கு மிக நல்லது!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)