சிவப்பு மிளகாயில் பொட்டாசியம் நிரம்பி இருப்பதால் அது உங்கள் இரத்த அழுத்தத்தினை சரி பார்க்க உதவுகின்றது.
சிவப்பு மிளகாய் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
நோய்களை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கின்றது. இதய நோய்களை தடுக்கின்றது.
ஆரஞ்சு பழத்தைவிட சிவப்பு மிளகாய் அதிக அளவு வைட்டமின் சி கொண்டுள்ளது.
ஒற்றைத் தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது, சளிக்கான அறிகுறிகளைக் குறைகிறது.
சிவப்பு மிளகாயை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
சரி இனி சிவப்பு மிளகாய் கொண்டு செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 6 பல்
வர மிளகாய் – 10
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி
கடுகு உளுந்து கறிவேப்பிலை
செய்முறை :
மேலே கூறிய தேவையான பொருட்களை mixi யில் போட்டு பச்சையாக அரைக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள வைகளை போட்டு தாளித்து
அதில் அரைத்ததை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலக்கி இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை, ரவா தோசை, ஊத்தப்பம், கார பனியாரம் ஆகிய வற்றிற்கு நன்றாக இருக்கும்.