பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !





பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

0

இப்போது இருக்கும் குழந்தைகள் எங்கே சார் நல்ல உணவுகளை விரும்புகிறார்கள். 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !
எல்லாம் அதிக இனிப்பு வகைகள், பாக்கெட் உணவுகள், துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குழந்தைகள் விரும்புகிறார்கள்.

அதிலும் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் இப்போது இருக்கும் குழந்தைகளிடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தைகள் இவற்றைக் கேட்டால் போட்டி போட்டு வாங்கியும் தருகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கான உணவுகள் குறித்து இன்று பார்ப்போம். 

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்... பவுர்ணமி நிலா சைஸ் ஹாட்பேக்.... அதில் சின்ன சின்ன பிஸ்கட்கள்... 

இதோடு முதுகை ஒரு வழியாக்கும் பாடப்புத்தகங்கள்... என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்க கூடாது. 

சாப்பிட கொடுத்து விடப்படும் உணவு சத்தானதா, உடலுக்கு நல்லதா என்பதையெல்லாம் பற்றி சிந்திக்காமல், 

வயிற்றை நிரப்பினால் சரி என்று பல பெற்றோர், கண்டதையும் கொடுத்து விடுகின்றனர். 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !
இதை தவிர்க்க, குழந்தைகளுக்கு தினமும் 3 வகை காய்கறிகள், 2 வகை பழங்கள் கொடுப்பது அவசியம், என்கிறார் மதுரை அப்போலோ மருத்துவமனை உணவியல் நிபுணர் சுகன்யா.

குழந்தைகளின் மெனுவைப் பொருத்தவரை எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. பெற்றோர்களான நாம் எதையெல்லாம், சத்தானது, 

ஆரோக்கியமானது என்று அழுத்திச் சொல்லி உண்ணச் சொல்கிறோமோ அதுவெல்லாம் அவர்களுக்கு உண்ணத் தகாததாகி விடும். 

எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று வலுக்கட்டாயமாகத் தடுக்கிறோமோ, அதுவெல்லாம் தான் அவர்களுக்கு ரொம்பப் பிடித்த உணவுகளாக இருக்கும். 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு உணவு மிக முக்கியம். 

அவர் தரும் டிப்ஸ்:  

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

காபி, டீ கொடுக்கக் கூடாது. காரணம் அதில் கபின் உடலுக்கு ஏற்றது அல்ல. இதற்கு பதில் பால் கொடுக்கலாம். 

இதை விரும்பாத குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், போன்விட்டா கலந்து கொடுக்கலாம். காலை உணவு அவசியம். 

அதிகாலையிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு முதலில் உணவு கொடுத்துவிட்டு, பின், பால் கொடுக்கலாம். 

இட்லி, பொங்கல், தோசையுடன் புதினா, மல்லி, கறிவேப்பிலை இதில் ஏதாவது ஒரு சட்னியை சேர்த்துக் கொடுக்கவும். 

சின்ன சின்ன இட்லி, கேரட் அல்லது காய்கறி தோசை என வெரைட்டியாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.  மூன்று வேளை உணவில் காய்கறி இருக்க வேண்டும். 

பள்ளிக்கு செல்லும் போது தண்ணீர் மட்டும் கொடுத்து விடாமல், லெமன் ஜூஸ், புதினா ஜூஸ் போன்றவற்றை கொடுக்கலாம். பழங்களையும் கட் செய்து கொடுத்து அனுப்பலாம். 

இன்டர்வெல் நேரத்தில் சாப்பிட, சூப் வகைகள், காய்கறி ஜூஸ், பழ ஜூஸ்களை கொடுக்கலாம். தினமும் ஒவ்வொரு வெரைட்டி கொடுக்க வேண்டும்.

தவிர கேரட், வெள்ளரி, பேரீச்சம்பழம் அனைத்து கலந்து கொடுத்து அனுப்பலாம். பள்ளி முடிந்து, மாலை வீடு திரும்பியவுடன் 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

அவல், பொரி கடலை, அவித்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டாணியை அளவோடு கொடுக்கலாம். 

எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.  மதிய உணவில் தினமும் காய்கறி சேர்க்க வேண்டும். 

வெஜிடபிள் ரைஸ், காலிபிளவர் ரைஸ், சோயாபீன்ஸ் ரைஸ், கீரை ரைஸ், கேரட், பீட்ரூட் ரைஸ், 

கேரட் பனீர் புலாவ், வெஜிடபிள் தால் ரைஸ், பட்டாணி புலாவ், சன்னா புலாவ் இதில் ஏதாவது ஒன்றை தினமும் கொடுக்கலாம். 

சைடு டிஷ் ஆக கேரட், வெள்ளரி, பூசணிக் காய் தயிர் பச்சடி சேர்க்கலாம்.

சாதம் விரும்பாத குழந்தைகளுக்கு 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

கீரை சப்பாத்தி, உருளைகிழங்கு, கீரை மசால், கீரை சூப், கீரை கூட்டு, கேரட் முட்டைகோஸ், பட்டாணி பொரியல் கொடுக்கலாம். 

இதன் மூலம் தேவையான தாது, உயிர்ச்சத்துகள் கிடைக்கின்றன. உடல் வளர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் சீராகிறது. 

உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது. மாலை நேர உணவு பழங்கள், நிலக்கடலை, பொரி உருண்டை, பாசி பருப்பு, பொரி கடலை லட்டு, அவல், பிரட் கொடுக்கலாம். 

மதிய உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு, மாலையில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். 

எடை குறைந்த குழந்தைகளுக்கு, தினமும் நான்கு வேளை உணவு கொடுப்பது அவசியம். 

மாலையில் அரை மணி நேரம் விளையாட வைக்க வேண்டும். இரவு, சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகே தூங்க வேண்டும்.

அசைவம் நல்லதா? 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

இரண்டு முட்டை நூறு கிராம் மட்டனுக்கு சமம் என்பதால், வாரம் இரு நாட்கள் முட்டை கொடுக்கலாம். 

சிக்கன், மட்டன், மீன்களை பொறிக் காமல் குழம்பு வைத்து, 50-75 கிராம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புரதச்சத்து, கொழுப்புச் சத்து கிடைக்கிறது. 

அதிகமானால் கெடுதல் தான். கட்டுப்பாட்டு உணவுகள் இனிப்பு வகைகள், சாக்லேட்ஸ், ஐஸ்கிரீம்ஸ், பேக்கரி உணவுகள், கூல்டிரிங்ஸ், சிப்ஸ், 

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், ஓட்டல் உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். இவ்வாறு கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)