சுவையான பட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி?





சுவையான பட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி?

பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
சுவையான பட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி?
பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. 

அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும்.

மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. 

இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

தேவையானவை :

சிக்கன் - அரை கிலோ

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 200 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

முந்திரி விழுது - 2 தேக்கரண்டி

கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

சீரகப்பொடி - அரை தேக்கரண்டி

தயிர் - 1 ஆழாக்கு

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

வெண்ணெய் - 4 தேக்கரண்டி

பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

கறுப்பு உப்பு - 1 தேக்கரண்டி

சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
செய்முறை :
பட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி?
சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தயிர், கறி மசாலா, கறுப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, 

தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.
புரோட்டீன் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் !
ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.

பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Tags: