ஆந்திரா நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?

ஆந்திரா நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?

0

தேவையானவை :

நெல்லிக்காய் - 500 கிராம்

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 3 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 10

பச்சை மிளகாய் -  10

வெந்தயம் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 150 மில்லி லிட்டர்

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !

செய்முறை :

ஆந்திரா நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?
நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிய பின் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், சிகப்பு மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

உறுப்பு தானம்... உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பச்சை மிளாகய், 

சிகப்பு மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய்யை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளவும்.

அதன்பின் ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் கலவையுடன் சேர்க்கவும்.

மறுபடியும் வாணலியில் வடித்து வைத்துளள எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து, கலந்து வைத்துள்ள நெல்லிக்காய் கலவை மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி, ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)