சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

0

தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப் பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?
இரும்பு சத்து மற்றும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த வாழை இலை !

27 புரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பரோட்டா திருவிழா என பெயர் வைக்கப் பட்டுள்ளது.

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

இதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பரோட்டா திருவிழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு அசத்தியுள்ளார்.

இதையடுத்து வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடையின் உரிமையாளர்கள் அறிவித்தபடியே தங்க நாணயத்தை வழங்கினர். 

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

இது குறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன், எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். 

அந்த வகையில் பரோட்டா திருவிழா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். 

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

இதற்கு தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் 50 பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டாம் என பரோட்டா கடை ஒன்றில் அறிவிக்கப் பட்டிருக்கும். 

மழையின் போது மண் வாசனை எப்படி உருவாகிறது?

நடிகர் சூரி பரோட்டா சாப்பிட்டு வெல்வார். அதனை ஞாபகப் பத்துகிறது இந்த தூத்துக்குடி ஹோட்டல். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)