சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
சிக்கன் ( Boneless Skinless Chicken ) – 1/4 கிலோ

பாஸ்மதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 பெரியது

தக்காளி – 2

புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

தயிர் – 1/2 கப்

சிக்கனுடன் சேர்த்து அரைக்க :

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 பெரிய துண்டு

பச்சை மிளகாய் – 3 (காரத்திற்கு ஏற்றாற் போல)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

கரம் மசாலா தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 மேஜை கரண்டி

பட்டை – 1, 

கிராம்பு – 2, 

ஏலக்காய் – 2
செய்முறை :
சிக்கன் கீமா பிரியாணி செய்வது
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ) சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

அரிசியினை 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைக்கவும்.
பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பிறகு புதினா, கொத்தமல்லி + அரைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிக்கனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ( 1 கப் அரிசிக்கு 1 கப் + 1/2 கப் தண்ணீர் )

தண்ணீர் கொதிக்கும் பொழுது, ஊற வைத்த அரிசியினை கழுவி, சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அரிசி சேர்த்த பிறகு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கியதும், அதில் எலுமிச்சை பழம் பிழிந்து கிளறி விடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன் கீமா பிரியாணி ரெடி. இத்துடன் ரய்தா, சிக்கன் ப்ரை அல்லது கிரேவியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 

குறிப்பு :

சிக்கன் அரைத்த செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்படுவாங்க..
நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !
சிக்கனை அரைக்காமல், Minced chickenயே வாங்கி கொள்ளலாம்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !